வடிவேலு திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியில் இடம் பெற்றுள்ள பிரபலமான வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்து வெளிவந்துள்ள நகைச்சுவை திரைப்படம் இந்த ‘கெணத்த காணோம்’ .

ஒரு கிராமத்துல இருக்கக்கூடிய மக்கள் குடிக்கிறதுக்கு தண்ணி இல்லாம ரொம்பவும் கஷ்டப்படுறாங்க அவங்களோட ஊருக்கு குடிக்கிற தண்ணீர் கொண்டு வருவதற்காக செய்கிற முயற்சியில யோகி பாபுவோட வீட்டு கிட்ட நீரோட்டம் இருக்கிறதை தெரிஞ்சு, அந்த வீட்டை கிராமத்து மக்கள் கேக்குறாங்க, ஊர் மக்கள் எல்லாம் அந்த இடத்துல கிணறு தோண்டுறப்ப அங்க தண்ணிக்கு பதிலா வேற பொருட்கள் கிடைக்குது ,இதனால அந்த கிணறு தோண்டப்பட்ட பகுதிய தொல்லியல் துறை பல ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கிறாங்க, இதனால அங்க இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படுற பிரச்சனைகளை யோகி பாபு எப்படி சரி செய்தார்? அப்படிங்கறதான் ‘கெணத்த காணோம்’ படத்தோட மீதி கதை.
இந்த படத்தோட கதையின் நாயகனாக மணிவாசகம் என்னும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிச்சிருக்காரு,தன்னுடைய நடிப்பு மூலமாகவும் ,தான் பேசக்கூடிய வசனங்கள் வாயிலாகவும் , தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்து ரசிகர்களை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால யோகிபாபு கவருகிறாரு,கதாநாயகியாக லவ்லின் சந்திரசேகர் நடிச்சிருக்காங்க மேலும் ரைச்சல் ரபேக்கா ராமகிருஷ்ணன் ஹலோ கந்தசாமி ,ஜார்ஜ் மரியன் உட்பட பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க .
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கக்கூடிய இந்த படத்துல பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கு ரசிக்கும் படி உள்ளன. பின்னணி இசை கதையோட்டத்துடன் பயணிக்க கூடிய வகையில் உள்ளது. கிராமத்து வாழ்வியல் சூழலை தன்னுடைய கேமரா கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புகள் மூலம் நிறைவாக பதிவாகி இருக்கிறார் ஓளிப்பறிவாளர் தியாகராஜன். கிராமத்து வாழ்வியல் சூழ்ந்த கதைக்களத்தில் நகைச்சுவையோடு ஒரு மெசேஜையும் படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா .
மொத்தத்தில் இந்த ‘கெணத்த காணோம்’ காமெடியும் கருத்தும் கலந்த திரை பதிவு
