Thursday, April 23

‘அனோமி’ திரைப்பட விமர்சனம்  

விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை கதையின் கருவாக எடுத்து, திரில்லர் மற்றும் க்ரைம் ஸ்டோரி ஆக மாறுபட்ட கோணத்தில்  சொல்லும் படம் ‘அனோமி’

மர்மமான முறையில சில பேர் கொலை செய்யப்படறாங்க யார் ?எதற்காக? இந்த தொடர்கொலைகளை பண்ணிட்டு இருக்காங்கன்னு போலீஸ் ஆபீஸராக இருக்கிற ரகுமான் கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு. விசாரணை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்குது.தடயவியல் நிபுணராய் இருக்கிற பாவனா கொலை நடந்த இடத்தில கிடைக்கிற சிலவற்றை வைத்து ஏதாவது ஒரு க்ளூ கிடைக்குதான்னு கொலையாளியே தேட முயற்சி பண்றாங்க. இந்த சூழ்நிலையில அவரோட அப்பா அம்மாவும் ஒரு விபத்துல ,இறந்து போக அதனால மனநலம் பாதிக்கப்பட்டு அவருடைய தம்பி சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் அவருடைய தம்பியும் இறந்து போறாரு . அதிர்ச்சி அடைந்த பாவனா கொலையாளியை கண்டுபிடிக்கணும்னு தனக்கு கிடைக்கிற ஆதாரங்களை வைத்து முயற்சி பண்றாங்க. இறந்து போன மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை முடிச்சுக்கலாம்னு என்கிற எண்ணத்தோடு இருந்தவங்கன்னு ரகுமான் கண்டுபிடிக்கிறார். ஆனா எதற்காக இவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ,எந்த ஒரு தடயமும் சிக்காமல் கொலைகளை யார் பண்றாங்க? என்ன காரணத்துக்காக பண்றாங்க ?என்று தெரியாமல் திகைக்கிறாரு ரகுமான். கடைசில பாவனா ஒரு பக்கம் தேடலை அதிகப்படுத்த, இன்னொரு பக்கம் ரகுமான் விசாரணையை தீவிர படுத்த ,கடைசில ரெண்டு பேர்ல யார் கொலையாளியை கண்டுபிடிச்சாங்க ?எந்த காரணத்திற்கான இந்த மரணங்கள் நடந்தது? கொலையாளிக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா?என்பதுதான் ‘அனோமி’ படத்துடைய முடிவு

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தமிழ்ல பாவனா இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. ஹீரோ இல்லாம , டூயட் படாம, கதையை ஹீரோவாக்கி , அதற்கு தன்னோட பங்களிப்பை முழுமையாக கொடுத்து படம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக பாவனா நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளராகவும் களம் கண்டிருக்கும் பாவனா தொடர்ந்து அந்த தளத்தில் வெற்றிகரமாக பயணிக்க வாழ்த்துக்கள்.

படத்துக்கு மிகப்பெரிய பலம் ரகுமானும், அவருடைய நடிப்பும் என்று சொல்லலாம் , இரண்டரை மணி நேர கதையில் பாவனாவும் இவரும் இரு துருவங்களாக பயணிக்கும் ,திரைக்கதையில் தனது அனுபவமான நடிப்பை வெகு யதார்த்தமாக கொடுத்து, தன்னுடைய ஆளுமையை அழகா வெளிப்படுத்திருக்காரு ரகுமான்.

மேலும் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஷெபின் பென்சன், அர்ஜுன் லால் போன்ற்வர்களும் குறைவில்லா நடிப்பை கொடுத்துள்ளார்கள்.சுதீப் சாரங்கின் ஒளிப்பதிவு யதார்த்தத்தை மிஞ்சாமல் திரில்லர் கதைக்கு தேவையான கோணங்களுடன் , திரைக்கதையோடும் நன்கு பயணம் செஞ்சிருக்கு.

இதுபோன்று கதை அம்சம் கொண்ட படங்களுக்கு பலம் சேர்ப்பது இசைதான் . இந்தப்படத்தில் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சிருக்கு அதிக சத்தம் இல்லாத இவருடைய பின்னணி இசையும் க்ரைம் சப்ஜெக்டோடு இசைந்து ஒன்றி இருக்கு.

ஒரு புதிய கண்டுபிடிப்புக்காக நடத்தப்படும் ஒரு ஆராய்ச்சியை கதையின் கருவாக எடுத்துகொண்டு அக்கதைக்கு அளவான கனக்கச்சிதமாக, பொருந்தும் வகையில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து நடிக்கவைத்து , அந்த கண்டுபிடிப்பினால் ஏற்பட போகும் விளைவுகள் என்ன என்பதை கிரைம் மற்றும் திரில்லிங்காக இயக்குனர் ரியாஸ் மராத் சொல்லியிருக்கிறார். ஒரே குற்றவாளி அவரைத் தேட வெவ்வேறு கோணத்தில் இருவர் பயணித்தாலும் , திரைக்கதையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் காட்சிகளை நகர்த்தி, காண்பவர்களை பரபரப்பாக வைத்திருந்தாலும், இரண்டரை மணி நேர அளவை கொஞ்சம் சுருக்கி இருந்தால் இறுக்கத்தோடு இல்லாமல் இயல்பாக படத்தினை பார்த்திருக்கலாம். இருப்பினும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கின்ற ‘அனோமி’ -யை வரவேற்கலாம்.

Spread the love