அனு மோகன் அவர்கள் பேசியதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை, ரெட் லேபிள் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான லெனினின் வீடியோ பதிவு
வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்ற நிகழ்வின்போது .அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அனு மோகன்பதில் கூறிய போது, நடிகர் விஜயோட அரசியல் பற்றி பேசிய கருத்துகள் பல சமூக ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது. இது குறித்து ரெட் லேபிள் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் தெளிவான விளக்க காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்த காணொளி பதிவில் அவர் கூறியுள்ளது,
எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ,அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன், விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது. அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே.அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான்.ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை. February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள் என்று கூறியுள்ளார்
நடிகரும் தயாரிப்பாளருமான திரு லெனின் அவர்களின் இந்த விளக்கப்பதிவானது அனுமோகன் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு தெளிவான பதிலை தரும் வகையில் அமைந்துள்ளது
