Tuesday, February 3

மெல்லிசை- திரைவிமர்சனம்

எளிய மனிதர்களின் கனவுகள் நிறைந்த வாழ்க்கை பயணத்தையும் அதில் அவர்களின் மன உணர்வுகளையும் இந்த மெல்லிசை இசைக்கிறது

கதையின் நாயகன் கிஷோர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மனைவி, மகன், மகள் என்று அழகான குடும்பத் தலைவனாக இருக்கும் கிஷோருக்கு இசை மீது மிகுந்த ஆர்வம், சிறந்த பாடகராக ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தாலும் ,அதற்குத் தடையாக அவருடைய குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் இருக்கின்றன .தனது தந்தையை பாடகர் ஆக்க வேண்டும் என்று அவரது மகள் மிகவும் விரும்புகிறார்அதன்படியே அவரது லட்சிய கனவை நோக்கி, தன்னுடைய வாழ்க்கை பயணத்தை நகர்த்தும் பொழுது அவரது குடும்பத்தில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன,அதன் பிறகு என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக கிஷோர் குமார் நடித்திருக்கிறார், ஏற்கனவே பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை இவர் வெளிப்படுத்தி இருந்தாலும், இந்தப் படத்தில் இவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் சாதாரண மனிதர்களுடைய வாழ்க்கையில ஏற்படக்கூடிய கனவுகள், குடும்ப பொறுப்புக்கள் இவைகளுடன் பயணிக்கும் ஒரு சராசரி குடும்பத் தலைவனை பிரதிபலிக்கும் வண்ணமாக சிறப்புற நடித்துள்ளார். கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட் நடித்திருக்கிறார், தன்னுடைய இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அவரும் பலம் சேர்த்துள்ளார்மேலும் மகளாக நடித்து இருக்கக்கூடிய தனன்யா வர்ஷினி ,மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய ஜஸ்வந்த் மணிகண்டன் இருவரின் கதாபாத்திரங்களும் அதனை அவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருந்த விதமும் நிறைவாக இருந்தது .

சராசரி குடும்ப உறுப்பினர்கள் நிறைந்த கதைக்களத்திற்கு தேவையான காட்சி அமைப்புகளை தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறது, சராசரி மனிதர்களின் உணர்வுகளை சித்தரிக்கும் வகையில் பாடல்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் காட்சிகளுக்கு தேவையான பின்னணி இசையினையும் சங்கர் ரங்கராஜ் நிறைவாக கொடுத்திருக்கிறார்.

ஆசைக்கனவுகளுடன், வாழ்க்கை பாதையில் பயணிக்கும் சராசரி குடும்ப தலைவனின் மன உணர்வுகளை சித்தரிக்கும் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு ,நேர்த்தியான திரைக்கதையுடன் நல்லதொரு படத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குனர் திரவ்.

மொத்தத்தில் இந்த மெல்லிசை ரசிகர்களின் மனங்களில் நல்லிசை மீட்டும்.

Spread the love