14 ஆம் நூற்றாண்டு காலகட்டக் கதையில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடிக்க, மோகன். ஜி இயக்கியுள்ள படம்.
வீர வல்லாள மகாராஜா(நட்டி) என்ற மன்னர் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார் அந்த வல்லாள மகாராஜாவின் கருட படையில் குறுநில மன்னர் வாரிசான வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) என்பவர் இணைந்து பணியாற்றுகிறார், வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முயற்சிக்கும்போது, அவர்களை எதிர்த்து போரிடும் வல்லாள மன்னர் கொலை செய்யப்படுகிறார். மன்னரையும் , கருட படை வீரர்களையும் காப்பாற்ற இயலாததை நினைத்து மனம் வருந்தும் வீரசிம்ம காடவராயர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது, மன்னர் அவர் முன் தோன்றி சில பொறுப்புகளை அவரிடம் கொடுக்கிறார்,அத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம காடவராயர் ஈடுபடுகிறார், இதன் பின் அவருக்கும் அவரது மனைவி திரெளபதி தேவிக்கும்(ரக்ஷனா இந்துசூடன்) என்ன நடந்தது ? வீரசிம்ம காடவராயர் , மன்னர் கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்றினாரா ? என்பதுதான் தான் ‘திரெளபதி 2’. படத்தின் மீதி கதை.

வீரசிம்ம காடவராயர் என்னும் கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார் , புதிய பரிமாணத்தில் ,தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வகையில், அவரது உடல் மொழியும் நன்கு அமைந்துள்ளதால் கதாபாத்திரத்துடன் அவரது நடிப்பு நன்கு ஒன்றிப் போகியுள்ளது , கதை நாயகியாக திரௌபதி கதாபாத்திரத்தில் ரக்ஷனா இந்து சூடன் நடித்திருக்கிறார்,இவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் .வீர வல்லாள மன்னர் கதாபாத்திரத்தில் நட்டி நடித்துள்ளார் அவரது தோற்றத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் பொருத்தம் இருந்தாலும், வசன உச்சரிப்பில் இன்னமும் அவர் கவனம் செலுத்தி இருக்கலாம்,
மற்றும் சிராக் ஜானி,தினேஷ் லம்பா,மேலும் இவர்களுடன் தேவியானி ஷர்மா, திவி வைத்யன்,வேலராமமூர்த்தி, பரணி, சரவண சுப்பையா மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் , ஜிப்ரானின் இசையில் பாடல்கள் நேர்த்தியாக உள்ளன, பின்னணி இசையும் திரையில் வலம் வரும் காட்சிகளுக்கு ஏற்றதொரு இணக்கமான பின்புலத்தை நன்கு கொடுத்துள்ளது ,இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் பிலிப் கே சுந்தர். படத்தின் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளை தன்னுடைய சிறப்பான கேமரா கோணங்கள் மூலமாகவும், ஒளியமைப்புகளின் மூலம் நன்கு படமாக்கியுள்ளார் .இது போன்ற வரலாற்று சம்பவங்களை கொண்ட திரைப்படங்களை எடுக்கும் பொழுது அதனை காட்சிப்படுத்தலும், படமாக்குவதற்கு தேவையான பட்ஜெட்டும் மிக முக்கியமான காரணியாக இருக்கக்கூடும், அவற்றை சிறப்பாக கையாண்டு படமாக்கி உள்ளார் இயக்குனர் மோகன். ஜி மன்னர் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதில் சில கற்பனைகளையும் இணைத்து இந்த படத்தின் திரைக்கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். படத்தின் நட்சத்திர தேர்வும், தொழில்நுட்பாளர்களின் நேர்த்தியான பங்களிப்பும் பிளஸ் ஆக இருந்தாலும், திரைக்கதையில் இன்னுமும் வேகமும் , விறுவிறுப்பும் கூட்டியிருக்கலாம்.
