மாய பிம்பத்துக்குள் காதல் கதையை கட்டமைத்து தொய்வு ஏற்படாத திரைக்கதையோடு இந்த பிம்பத்தில் நம்மையும் கூடவே பயணிக்க வைக்கின்ற படம் மாய பிம்பம்.

2005 இல் நடக்கிற கதையாக காட்சிகள் தொடங்குது, மெடிக்கல் ஸ்டூடண்டா இருக்குற ஆகாஷ் மற்றும் அவருடைய பிரண்ட்ஸ் ஹரி ராஜேஷ் மற்றும் அருண்குமார் எல்லாரும் நண்பர்களாக பல விஷயங்களை பரிமாறிக்கிட்டு சந்தோஷமா ஜாலியா இருக்காங்க. அந்த நாலு பேர்ல ஒரே ஒரு பிரெண்டு மட்டும் பெண்களைப் பத்தியும், பெண்களை எப்படி கவரணும் அப்படிங்கறத பத்தியும் நண்பர்கள் கிட்ட சொல்றாரு இதையே ஒரு அவர் பொழுதுபோக்காகவும் வச்சிருக்காரு, இந்த நேரத்துல ஆகாஷ், நர்சா வேலை பாக்குற ஜானகியை பாக்குறாரு ,இதை தன் நண்பர்களோடயும் பகிர்ந்துக்கிறார், ஆனால் ஜானகி உடைய உண்மையான சூழ்நிலையை முழுமையாக தெரிஞ்சுக்காம ,அவர்களுடைய மனசுல என்ன இருக்குன்னு என்பது புரிஞ்சுக்காம ,அவங்கள பத்தி தவறுதலான ஒரு பிம்பத்தை உருவாக்கி, ஆகாஷ் உடைய மனசுல பதிய வைக்கிறார்கள் ,அந்த அந்த எதிர்பார்ப்போடவே ஆகாஷ்யும் அவங்க கூட பழகுறாரு.இப்படி ஆகாஷ் உடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்க, ஜானகியுடைய எண்ணம் அதற்கு நேர் மாறாக இருக்குது. ஒரு கட்டத்துல இருவருக்குமான புரிதல் என்னவாக இருந்தது என்று தெரிய வர ,அதனால ஏற்படுற விபரீத நிகழ்வு என்ன ?அதற்கான முடிவு என்ன ?என்பதுதான் இந்த படத்துடைய முடிவு.
கதாநாயகனாக வர ஆகாஷும், கதாநாயகியாக நடிச்சிருக்கின்ற ஜானகியும் மற்றும் அவருடன் கூடவே பயணிக்கிற நண்பர்களும் அனைவரும் அறிமுகங்களாக இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் தயக்கமில்லாமல் கதாபாத்திரங்களாகவே மாறி கதைக்கு பலம் சேர்த்திருக்காங்க.நடிகர்கள் படத்தின் முதல் பாதியை ஜாலியாகவும் ,இரண்டாம் பாதிக்குள் பயணிக்கும் போது பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்காங்க.

ஒரு தெளிவான சலனம் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் அமைதியாய் பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்றவாறு காட்சிகளுக்கு அழகு சேர்த்து இருக்கிற ஒளிப்பதிவாளர் டேவிட் சகாயும் ,காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணிஇசையினை கொடுத்திருக்கிற இசையமைப்பாளர் நந்தாவும் மாய பிம்பத்தை கட்டமைக்க உறுதுணையாய் இருந்திருக்காங்க.

ஒரு காதல் கதையை முற்றிலும் புதுமுக நடிகர்களை கதாபாத்திரங்களுக்கு ஏத்த மாதிரி தேர்வு செய்து அவர்களை அவர்களுக்குள் இருந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்பட வைத்து ,கூடவே தெளிவான திரைக்கதையையும் அமைத்து ,எதிர்பாராமல் ஏற்படுகின்ற நிகழ்வுகளை சரியான இடத்தில் பொருத்தமாக வைத்து, நடிகர்களோடு , தானும் அறிமுகமாகி ,தயாரிப்பாளராகவும் ,இந்த மாய பிம்பத்தை,பல போராட்டங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் வெளிச்சமிட்டிருக்கிறார் இயக்குனர் கே. ஜே சுரேந்தர்.
மாய பிம்பம் புதியவர்களின் புது முயற்சி.
