இரட்டை வேடத்தில் அருண் விஜயின் திரைப் பிரவேசம்

பெற்றோரின் ஆதரவின்றி பாண்டிச்சேரி வளரக்கூடியவர்கள் அருண் விஜய் மற்றும் சித்தி இத்னானி, பல வருட இடைவெளிக்குப் பிறகு அருண் விஜய் சித்தியை திருமணம் செய்து கொள்ள வருகிறார், ஆனால் சித்தியோ தான் ஒரு பெரிய மாடலாக வேண்டும் ,ஏராளமாக பொருளீட்ட வேண்டும் என்ற கனவுகளுடன் உள்ளார் , இந்த சூழ்நிலையில் அருண் விஜய் தன்னை ஒத்த உருவத்தில் இருக்கும் செல்வந்தரான உபேந்திராவை சந்திக்கின்றார், உருவத்தில் ஒற்றுமையுடன் இருக்கும் உபேந்திராவை கொன்றுவிட்டு அவருடைய சொத்துக்களை தங்கள் வசமாக்கிக் கொள்ளலாம் என சித்தி தரும் ஆலோசனைப்படி அருண் விஜய் அவரை கொல்கிறார் ,ஆனால் அதற்குப் பிறகுதான் உபேந்திரா உண்மையில் யார் ?அவருடைய பின்னணி என்ன ?போன்ற பல விஷயங்கள் தெரிய வருகின்றன, இதன் பிறகு என்ன நடந்தது ?என்பதுதான் ரெட்ட தல படத்தின் மீதிக்கதை.
காளி, உபேந்திரா என்னும் இரு கதாபாத்திரங்களில் அருண் விஜய் நடித்துள்ளார், இரு பாத்திரங்களிலும் தோற்றமளவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் இல்லை என்றாலும் ,அதனை ஈடு கட்டும் வகையில் தன்னுடைய உடல் மொழியால், இரு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான ஒரு பரிமாணத்தை தன்னுடைய நடிப்பின் மூலம் அருண் விஜய் கொடுத்திருக்கிறார். அளவற்ற செல்வத்தின் மீது ஆசை கொண்ட கதாபாத்திரத்தில் நாயகி சித்தி இத்னானி நடித்துள்ளார், தன்னுடைய கேரக்டரை அழகாக உள்வாங்கி,அதனை தன் நடிப்பின் மூலம் சிறப்பாக அவர் வெளிப்படுத்தி உள்ளார்.மேலும் ஜான் விஜய் ,ஹரிஷ் பேரடி, தன்யா ரவிச்சந்திரன்,பாலாஜி முருகதாஸ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியுள்ளார்கள். இந்தப் படத்துக்கு இசை சாம் சி., எஸ் ,அவரது பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஏற்ப நன்கு அமைந்து .விறுவிறுப்பை கூட்டுகிறது. காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை சிறப்பாக தரும் வகையில் ,கேமரா கோணங்களும் சரி ,காட்சி அமைப்புகளும் சரி, அவைகளுக்கு தேவையான ஒளி அமைப்புகளும் சரி, நன்கு அமைக்கப்பட்டு ஒளிப்பதிவில் தனி கவனம் செலுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் டிஜோடாமி.
ஏற்கனவே மான்கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார், எடுத்துக்கொண்ட ஆக்சன் கதைக்கு இணக்கமாக ,திரைக்கதை காட்சிகளை அவர் அமைத்துள்ளார், ஓரு முழுநீள கமர்ஷியல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்த இந்த ரெட்ட தல, ஆக்ஷன் ரசிகர்களை பெரிதும் கவரும்.
