வேலையை இழந்த பிறகு சொந்தமாக டாக்ஸி வாங்கி ஓட்டுபவராக கிஷோர் உள்ளார் மற்றொருவர் டெலிவரிபாயாக பணி புரியும் டிடிஎஃப் வாசன். ஒரு சமயம் வாசன் பைக்கில் செல்லும் பொழுது குணசேகருடன் ஒரு மோதல் ஏற்படுகிறது ஆனால் மற்றும் ஒரு நபரால் குணசேகருக்கு காலில் முறிவு ஏற்படுகிறது, இதனால் அவர் வாசன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். மற்றொருபுறம் தான் லஞ்சம் வாங்குவதை ஒரு இளைஞன் வீடியோ எடுத்ததாக சந்தேகப்படும் காவல்துறை அதிகாரி போஸ்வெங்கட் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கும் பொழுது அவன் இறந்து விடுகின்றான், அவனது செல்போனில் இருக்கும் ஒரு வீடியோவை வைத்து தப்பிக்க எண்ணுகிறார் போஸ் வெங்கட். கிஷோரின் தங்கையை காதலிக்கும் வாசன் உண்மைகளை கண்டறிந்து கிஷோரை காப்பாற்றினாரா இல்லையா? அந்த வீடியோவில் இருந்தது என்ன? என்பதுதான் ஐபிஎல் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் ஏற்கனவே இணையதளங்கள் வழியாக ரசிகர்கள் இடையே மிகுந்த அறிமுகம் பெற்றிருந்த வாசன் இந்தப் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார். இவரை பொறுத்த அளவில் முதல் படம் என்று தோன்றாத அளவிற்கு தன்னுடைய கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தின் மையக்கதா பாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயல்வான நடிப்பை படம் முழுவதும் வழங்கி இருக்கிறார். இவரது மனைவியாக அபிராமியும், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்படிநிறைவாக நடித்துள்ளார்கள் மேலும் குஷிதா ,ஹரீஷ் பெரடி,சிங்கம் புலி,ஆடுகளம் நரேன்,ஜான் விஜய் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில குறைவின்றி நன்றாகவே நடித்துள்ளார்கள்.
அஸ்வின் விநாயகமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பாடல்கள் அனைத்தும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளன. கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ற வகையில் நேர்த்தியான ஒளிப்பதிவுனை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிச்சுமணி.
இன்றைக்கு சமூகத்தில் அதிகார பலமும் பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதனை சாமானிய மக்கள் மீது திணித்து விடுகிறார்கள் அதன் பிறகு அந்த சாமானிய மனிதர்கள் எப்படி தாக்குதலுக்கு உட்படுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? இவைகளை மையமாக வைத்து ஒரு கதை களத்தை அமைத்து படத்தை நன்கு இயக்கியுள்ளார் இயக்குனர் கருணாநிதி.
