Wednesday, December 31

ரிவால்வர் ரீட்டா – திரை விமர்சனம்

டார்க் காமெடி ஜானரில் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக களமிறங்கியுள்ள படம் ரிவால்வர் ரீட்டா.

பாண்டில பெரிய தாதாவா இருக்கிற சூப்பர் சூப்பராயன் தனக்கு போட்டியா இருந்த அஜய் கோஸ் உடைய தம்பியை வெட்டி கொலை செய்கிறார், இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் எப்படியாவது தன்னுடைய தம்பி இறப்பதற்கு காரணமான சூப்பர்சுப்பராயினை பழி வாங்கணும்னு காத்துக்கொண்டிருக்கிறார் அஜய் கோஷ். சூப்பர் சூப்பராயனின் மகனான சுனிலும் வாரிசு தாதாவா வலம் வராரு , பலமாய் இருக்கிற சூப்பர் சுப்புராயனுக்கு மது மற்றும் மாது போன்ற பலவீனங்களும் இருக்கு. இந்த சமயத்துல சுரேஷ் சக்கரவர்த்தி போன் செய்ய அவர் சொல்ற இடத்துக்கு சூப்பர் சூப்பராயன் வராரு, ஆனா போதையில் வீடு மாறி ராதிகா வீட்டுக்குள் தவறுதலா போயிடுறாரு. ராதிகாவும், கீர்த்தி சுரேஷ் யாருன்னு கேட்க தன் சுயநினைவை இழந்து நிற்கிற அவர் கீர்த்தி சுரேஷ் கிட்ட தவறாக நடந்துக்க முயற்சி செய்கிறார், இதனால கோபப்படுற ராதிகா அவரை அடிக்க கீழே விழற சூப்பர் சுப்பராயன் இறந்து போறாரு. தன்னுடைய அக்கா மகள் உடைய பிறந்தநாளை கொண்டாடணும் சந்தோஷமாய் இருந்த நேரத்துல இப்படி ஒரு சம்பவம் நடக்க ரெண்டு பேரும் என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க ,இறந்து போன சூப்பர் சூப்பராயன் மிகப்பெரிய ரவுடி என்றும் இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அவருடைய மகன் சுனில் ,குடும்பத்தையே அழிச்சிடுவாருன்னு கீர்த்தி சுரேஷ் உடைய அக்கா சொல்றாங்க. போலீசுக்கும் போக முடியாத சூழ்நிலையில பிணத்தை என்ன செய்கிறது என்று முடிவு எடுக்க முடியாமல் எல்லாரும் இருக்காங்க. இது ஒரு பக்கம் இருக்க, தந்தை காணாமல் போன விஷயம் சுனிலுக்கு தெரிய வருது. அடுத்த நாள் யாருக்கும் தெரியாம பிணத்த அப்புறப்படுத்தனும்னு ராதிகாவும் கீர்த்தி சுரேஷ் முயற்சி செய்றாங்க ஆனால் தடையாக பல சம்பவங்கள் ஏற்படுது. அப்பா காணாமல் போனதற்கு யார் காரணம் எங்கே இருக்காருன்னு பல இடங்களில் சுனில் தேட ,காவல்துறை அதிகாரி ஜான் விஜயிடம் நடந்த விஷயங்களை சொல்றாரு, இதுனால முன்பே ஏற்பட்ட ஒரு முன்பகையினால கீர்த்தி சுரேஷை எப்படியாவது பழி வாங்கணும்னு காத்துகிட்டு இருக்கிற ஜான் விஜயும் சந்தோஷப்படுகிறாரு, ஏற்கனவே சூப்பர் சுப்ப ராயினை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த கல்யாணமும் , அவருடைய ஆட்களும் காத்துகிட்டு இருந்த நேரத்துல கீர்த்தி சுரேஷ் உடைய வீட்டுல நடந்த சம்பவம் அவர்களுக்கு சாதகமாக அமையுது, இறந்து போன சூப்பர் சுப்பராயினோட தலையை ஆந்திராவில் இருக்கிற அஜய் கோஸ் கிட்ட கொடுத்தா 5 கோடி கிடைக்கும்கிறதுனால அவர்களும் அந்த பிணத்தை கைப்பற்றனும்னு முயற்சி செய்றாங்க. தன் அப்பாவை எப்படியாவது கண்டு பிடிச்சு அதுக்கு காரணமானவர்களை பழி வாங்கணும்னு நினைக்கிற சுனில்,இன்னொரு பக்கம் தன்னை அவமானப்படுத்திய கீர்த்தி சுரேஷை எப்படியாவது பழி வாங்கணும்னு நினைக்கிற ஜான்விஜய் ,இறந்து போன சூப்பர் சூப்பர் சுப்ப ராயன் உடம்ப கொடுத்து 5 கோடியே வாங்கலாம்னு நினைக்கிற கும்பல் , இப்படி ஒருவரை மையப்படுத்தி மூன்று குழுக்களும் பயணிக்க இறுதியாக யாருடைய எண்ணம் நிறைவேறிச்சு? என்பதுதான் ரிவால்வர் ரீட்டாவின் மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகிய இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மைய கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .தன்னுடையஅனுபவ நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படும் வகையில் ராதிகா சரத்குமார் சிறப்பாக நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் சுனில் .அஜய் கோஷ் , கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜான்விஜய் ரெடின்கிங்ஸ்லி சென்ராயன் என பல கலைஞர்களும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் படம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார்கள், ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு எந்தவித குறையும் இல்லாமல் நிறைவாகவே நடித்துள்ளார்கள் .

ஒளி அமைப்பிலும்,காட்சி கோணங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் .ஷான் ரோல்டனின் பின்னணி இசை கதையோட்டத்துடன் பயணித்துள்ளது. பிளாக் காமெடி பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சந்துரு. ஒரு பிணத்தை மறைக்க நாயகியும் அவரது குடும்பமும் படும் இன்னல்கள் , அந்த பிணத்தை தேடி அலையும் குழுவினர் என நகரும் கதையில் இன்னமும் நகைச்சுவை அம்சங்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால் அது படத்திற்கு இன்னமும் பலம் சேர்த்திருக்கும். மற்ற வகையில் முழு நீள பொழுதுபோக்கு படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு உள்ளதால் இந்த ரிவால்வர் ரீட்டா அனைத்து ரசிகர்களையும் நிச்சயம் கவரும்.

மொத்தத்தில் இந்த ரிவால்வர் ரீட்டா, இன்னுமும் சரியான இலக்கை நோக்கி இருந்திருக்கலாம் .

Spread the love