Friday, April 24

ரஜினி கேங்-திரை விமர்சனம்

காதலர்களான ரஜினி கிஷன், திவிகா இருவரும் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் தீபிகாவின் மாமா கூல் சுரேஷ் இந்த திருமணத்தை தடுக்க முயற்சிக்கிறார், ஆனால் நண்பர்களின் ஆதரவுடன் ரஜினி கிஷன் தூவிக்கா ஜோடி திருமண பந்தத்தில் இணைகிறார்கள் ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு தீபிகாவின் கழுத்தில் இருக்கும் தாலியில் ஒரு பேய் மறைந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது இதன்பின் என்ன நடந்தது அந்த புதுமண தம்பதிகள் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக ரஜினி கிஷன் நாயகியாக திவிகா நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கதைக்கும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக தங்களது நடிப்பை குறைவின்றி வழங்கி உள்ளார்கள். மேலும் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி ராஜா போன்றவர்களும் நன்கு நடித்துள்ளார்கள் ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன .ஹாரர் காமெடி கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை நயம்பட பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்.

காமெடி, ஹாரர், எமோஷன் என எல்லா அம்சங்களும் நிறைந்த பக்கா கமர்சியல் படமாக இந்த படத்தினை இயக்குனர் எம். ரமேஷ் பாரதி இயக்கி உள்ளார். இவர் இதற்குமுன் பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கியவர் .வழக்கமான பேய் கதைதான் என்றாலும் அதிலும் ஒரு புது ட்விஸ்டை வைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் ரஜினிகேங், லாஜிக் இல்லாத மேஜிக் ஹாரர் காமெடி படம்

Spread the love