இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ,துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உடன் மற்றும் பலர் நடித்திருக்கும் காந்தா.
1950 களில் நடைபெறும் சம்பவங்களை கொண்ட களத்தில் பயணிக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது .அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக சமுத்திரகனி இருக்கிறார், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு ஆளுமை மிக்க நடிகராக இருக்கக்கூடிய முன்னணி நடிகராக துல்கர் சல்மான் உள்ளார் , சமுத்திரகனி தன்னுடைய கனவு படமான சாந்தாவை துல்கர் சல்மானை வைத்து இயக்குகிறார் ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள ஈகோவினால் அந்தப் படம் முழுமை பெறாமல் கைவிடப்படுகிறது அந்தப் படத்தை மீண்டும் படமாக்கும் முயற்சியில் மாடர்ன் தியேட்டரின் உரிமையாளர் திட்டமிடுகிறார் மீண்டும் படப்பிடிப்புக்கு துவங்கினாலும், படத்தின் காட்சிகளை நாயகன் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கிறார், படத்தின் டைட்டிலை கூட அதே போல் மாற்றம் செய்கிறார் .அந்தப் படத்தின் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் இயக்குனரால் நியமிக்கப்படுகிறார், பாக்யஸ்ரீ துல்கர் சல்மானிடம் காதலில் விழ ,அதன் பின் என்ன நடந்தது? இயக்குனருக்கும் நாயகனுக்குமான ஈகோ மோதலினால் அந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டதா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தின் கதையின் நாயகனாக டி. கே .மகாதேவன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார் .50 கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் வெற்றி வலம் வந்து கொண்டிருந்த நடிகரினை சித்தரிக்கும் கதாபாத்திரத்தின், பல்வேறு மாறுபட்ட பரிணாமங்களை அழகாக பிரதிபலிக்கும் விதமாக ,அவரது நடிப்பு இந்த படத்தில் அமைந்திருந்தது. அவருக்கு இணையாக சமுத்திரகனியும் ‘அய்யா’ என்னும் தன்னுடைய கதாபாத்திரத்தில், படம் முழுவதும் தன் உடல் மொழியாலும், நடிப்பாலும் சிறப்பான பங்களிப்பினை இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்துள்ள பாக்கியஸ்ரீ அக்கால திரை நட்சத்திரத்தை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நன்கு மெருகேற்றி உள்ளார். மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்திருக்கிறார், விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் இவரது அசத்தலான நடிப்பை நன்கு ரசிக்கலாம் .மற்றும் காயத்ரி, நிழல்கள் ரவி ,ஆடுகளம் நரேன் போன்ற அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பு வழங்கி இருக்கிறார்கள்.
காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் கதையின் காலகட்டத்திற்கு ஏற்ற காட்சி அமைப்புகளை மறு உருவாக்கம் செய்வதில் அதில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது மறுக்க முடியாதது .அந்த வகையில் 50 களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகளை கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் டேனி சான்சஸ் லோபஸ். அதேபோல ஜானசந்தாரின் இசையில் பாடல்களும் பின்னணி செய்யும் காட்சிகளின் பின்புலத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது .முக்கால காலகட்டத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் அரங்க அமைப்புகளை காட்சி பின்னணிகளை நன்கு உருவாக்கும் பணியில் கலை இயக்குனர் ராமலிங்கமும் ,ஆடை வடிவமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.
இரண்டு திரை ஆளுமைகளின் இடையே ஏற்படும் ஈகோ மோதலினையும் ,அதனால் அவர்களுடைய திரை பணிகளில் ஏற்படும் பின்விளைவுகளையும் சொல்லியவண்ணம் செல்லும் கதையில், பின்னர் ஏற்படும் சம்பவத்துக்கு பின் புலனாய்வு திரில்லர் பாணியில் பயணிக்கும் வகையில், காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் .
இந்த பீரியட் படத்தின் முதல் பாதியை போலவே, இரண்டாவது பாதியும் அமைக்கப்பட்டிருந்தால் இன்னமும் அது ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கும்,
மொத்தத்தில் காந்தா பின்னோக்கிய காலத்தில் பயணிக்க வைக்கும் அழகிய .திரை பயணப்பதிவு
