Thursday, April 23

பரிசு – திரைவிமர்சனம்

பரிசு திரைப்படத்தில் ஜான்விகா, ஜெய்பாலா ,கிரண்ப்ரதீப் , சுதாகர், ஆடுகளம் நரேன், மனோபாலா ,சென்ராயன், சின்னப்பொண்ணு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கலா அல்லூரி எழுதி இயக்கி உள்ளார், ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ்,பின்னணி இசை – சி.வி. ஹமரா ,பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி – இளங்கோ. தயாரிப்பு: ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.

கதையின் நாயகியான ஜான்வி ஒரு ராணுவ வீரரின் மகள். பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஜான்வி படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிக்க ஆர்வம் கொண்டவராக உள்ளார். அழகும் அறிவும் ஒன்று சேர்ந்த ஜான்வின் மனதில் இடம் பிடிக்க அவளுடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள்சிலர் , முயற்சித்தாலும் அவற்றைக் கண்டு கொள்ளாத ஜான்வி தனது லட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். தன் தந்தையிடமே துப்பாக்கி சூடும் பயிற்சியினை பெறும் ஜான்வி . துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபடுவதோடு விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவராக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார் விவசாயம், பொதுநலம் விளையாட்டு எனது தன் வாழ்க்கை பாதையில் பயணித்து வரும் ஜான்வி கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் முதல் பரிசையும் பெறுகிறாள் .அவளது தந்தையின் ஆசைப்படியே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசைக்கனவுடன் ஜான்வி இருக்கிறாள். இந்த சமயத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்லும் ஜான்வியுடன் அறிமுகம் ஆகும் ராஜேஷ் உடன் ஒரு புரிதல் உண்டாகிறது. ராஜேஷ் அவளை காதலிப்பதாக கூற,தனக்கு தன் லட்சியம் தான் முதன்மையானது என்று அவள் அந்த காதலை தள்ளி வைக்கின்றாள் ,ஜான்வி ஒரு விபத்தை கண்ணெதிரே பார்க்கும் சூழலில் அந்த விபத்துக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறாள்.அதனால் அதன் பின்னணியில் உள்ள அதிகாரங்கள் ஜான்வியை கடத்துகிறார்கள் இதன்பிறகு என்ன நடந்தது ஜான்வி தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னை எப்படி காத்துக் கொண்டாள் ? அது மட்டும் இல்லாமல் தன்னுடைய லட்சியக் கனவான ராணுவ கனவையும் அவள் நிறைவேற்றிக் கொண்டாளா? இல்லையா? என்பதுதான் பரிசு படத்தின் மீதி கதை .

பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரதானமான ஜான்வி என்னும் கதாபாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார் ,கல்லூரி மாணவியாக நடித்துள்ள இவர் தன்னுடைய தந்தையினுடைய லட்சிய கனவை நிறைவேற்ற பாடுபடும் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நடிப்பில் மட்டுமல்லாது சண்டை காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ள அவரின் நடிப்பு பாராட்டும் படி உள்ளது .மேலும் கிரண் பிரதாப். ஜெய் பாலா. மனோபாலா. சின்ன பொண்ணு .சென்ராயன் குறிப்பாக நாயகியின் தந்தையாக ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடுகளம் நரேன் போன்றவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் குறைவில்லாத நடிப்பை நன்கு வழங்கி இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ராஜீஷ், படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன காட்சிகளுக்கு தேவையான ஒளி வடிவத்தை தரும் ஒளிப்பதிவினை சங்கர் செல்வராஜ் நன்கு அமைத்துள்ளார்.. ஹமாராவின் பின்னணி இசை காட்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை கலா அல்லூரிஎழுதி இயக்கியுள்ளார் .

பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இரண்டு கண்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இந்த பரிசு திரைப்படம்.

Spread the love