இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் பைசன் காளமாடன். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இளம் பிராயத்தில் இருந்தே கபடி விளையாட்டின் மீது ஆர்வமிக்க கிட்டான் (துருவ் விக்ரம்) வனத்தி என்னும் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் அவனது தந்தை பசுபதி(வேலுசாமி). பள்ளியில் படித்துவரும் கிட்டான் கபடி மீது ஆர்வமாக உள்ளது அவரது தந்தைக்கு உடன்பாடில்லை கிட்டான் படிக்கும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் துருவ் விக்ரமின் விளையாட்டு திறனை பார்த்து அவரை பள்ளி கபடி அணியில் சேர்த்து அவனுக்கு ஊக்கம் கொடுக்கிறார் அந்த ஊருக்குள் இருக்கும் அமீர் (பாண்டியராஜ்), மற்றும் லால் (கந்தசாமி) என்னும் இரு தரப்பினரிடையே சாதிய ரீதியான பிரச்சனைஉள்ளது இப்படிபட்ட சூழலில் தன்னை சுற்றி எழும் தடைக்கற்களை உடைத்துவிட்டு தன் கபடி விளையாட்டில் இலக்கை நோக்கி பயணிக்க நினைக்கும் கிட்டானின் முயற்சி வெற்றிக்கோட்டை அடைய அவரை அடைய வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை
இந்த படத்தில் வணத்தி கிட்டுவாக துருவ் விக்ரம் ,மணத்தி கணேசன் என்னும் அசல் கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் புதிய பரிமாணத்தில் தன நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார், அசல் கபடி வீரர்களை கண் முன்னே நிறுத்தும் விதத்தில் இவரது தோற்றமுமும் நடிப்பும் நன்கு திரையில் வெளிப்பட்டுள்ளது . மேலும் கந்தசாமி என்னும் கதாபாத்திரத்தில் லாலும் பாண்டியராஜாவாக அமீரும் நன்கு நடித்துள்ளனர். இவர்களுடன் துருவின் தந்தை வேலுசாமியாக நடித்துள்ள பசுபதி தன்னுடய கதாபாத்திரதுக்கு தனது இயல்பான நடிப்பின் மேலும் பலம் சேர்த்துள்ளார் மேலும் துருவின் சகோதரியாக ரஜிஷா விஜயன், மாமன் மகளாக அனுபமா பரமேஸ்வரன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
கிராமத்தின் அழகிய வாழ்வியலை எழிலரசுவின் ஒளிப்பதிவு சிறந்த முறையில் பதிவு செய்துள்ளது நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்களும் காட்சிகளுக்குகேற்ற பின்னணி இசையும் கதையோடு பயணித்து உள்ளது சிறப்பு.படம் வெளிவருவதற்க்கும் முன்பே ரசிகர்களை ஈர்த்த தென்னாடு ,‘சீனிக்கல்லு’ தீக்கொழுத்தி உட்பட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன
கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து, இலட்சிய விளையாட்டில் வெற்றி பெற கனவுகளுடன் இருக்கும் கிராமத்து இளைஞனின் சமூக வாழ்வியல் கதையினை எடுத்துக்கொண்டு,அந்த கதை மாந்தர்களுக்கு பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து, அவர்களுடன் நேர்த்தியான தொழில் நுட்ப அணியினரையும் இணைத்து கொண்டு சிறப்பான திரைமொழியில் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்..
