கேம் ஆப் லோன்ஸ் திரைவிமர்சனம்

நிவாஸ் ஆதித்யன் தனது மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தையுடன் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் ,கொரோனா காலத்தில் அவர் வேலையை இழக்கவே கடன் சுமைகளுக்கு ஆளாகிறார், காதலித்த கணவனின் கடனையும் குடும்பத்தையும் காப்பாற்ற அவருடைய மனைவி வேலைக்கு போறாங்க நிவாஸ் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட ஆரம்பிக்கிறாரு நிவாஸ் ஆரம்பத்துல வெற்றி பெற அந்த ஆசையே அடுத்தடுத்து அவர் விளையாடும் ஆவலை தூண்டுகிறது இதனால எப்படியாவது ஜெயிச்சு இழந்த பணத்தை மறுபடியும் பெற்றிட மாட்டோமா ? என்று எந்த நேரமும் ஆன்லைன் கேம் விளையாடிட்டு இருக்கிறார் இதனால ஆப் மூலமா கடனும் வாங்கி விளையாடுறாரு பல விளையாட்டுகள் விளையாட்டினாலும் தொடர்ந்து தோல்வி அடையறதனால இன்னும் மிகப்பெரிய கடனாளியாக அவர்ஆகிறார் இவருடைய சூழ்நிலையை புரிஞ்சு அவருடைய மனைவி என்னதான் சப்போர்ட் பண்ணாலும் அந்த விளையாட்டினுடைய மோகத்திலிருந்து விடுபடாமலும், கடனை திருப்பி அடைக்க முடியாமலும் ,கைதியா அந்த வீட்டுக்குள்ளாரே முடங்கி போய் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மணி ஆப் மூலமா வாங்கிய கடனை பணம் வசூலிக்க அபினவ் மற்றும் அவரது உதவியாளர்கள் இரண்டு பேரும் நிவாஸ் உடைய மனைவி இல்லாத நேரத்துல வீட்டுக்கு வராங்க அவரை கட்டிப்போட்டு மென்டலா அவருக்கு பல தொல்லைகள் கொடுக்கிறாங்க வட்டியோடு சேர்த்து பல லட்சங்கள் கொடுக்க வேண்டிய பணத்துக்கு என்ன வழி என்று கேட்கிறார்கள். தன்கிட்ட எதுவும் இல்லாததுனால. என்ன பண்றதுன்னு தெரியாமலும் , பதில் சொல்லவும் முடியாமலும் முழிக்கிறாரு நிவாஸ் ,… கடைசில நிவாஸ் ஆதித்யன் என்ன முடிவு எடுத்தார் எப்படி வாங்குன கடனை திருப்பி கொடுத்தாரு ?இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு என்ன அப்படிங்கறததுதான் படத்துடைய முடிவு.
இந்தப் படத்துல கதாநாயகனா நடிச்சிருக்கிற நிவாஸ் ஆதித்யன் ஆன்லைன் விளையாட்டு விளையாடி, பல லட்சங்களை இழந்து, கடன் சுமையினால பாதிக்கப்பட்டு குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இளைஞனாக நடிச்சிருக்காரு பதட்டம் ,பரிதாபம் ,கோபம் உணர்ச்சி இவை அனைத்தையும் இந்த கதாபாத்திரத்தின் மூலமாக அழகாக வெளிப்படுத்தி இருக்காரு நிவாஸ் ஆதித்யன். இந்தப் பிரச்சினையினால் தற்கொலை செய்து கொண்டவர்களுடைய மனவேதனையை அழகாக நிவாஸ் நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகியா நடிச்சிருக்கிற எஸ்தர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பு சரியா செஞ்சிருக்காங்க. துள்ளுவதோ இளமைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபிநய் இந்த படத்தின் நடிப்பில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அளவான நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காரு. கத்தியின்றி ரத்தம் இன்றி வசனங்கள் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் நிவாஸை தன் வயப் படுத்திருக்கிற அபிநயின் அனுபவநடிப்புக்கு வாழ்த்துக்களை சொல்லலாம். படம் முழுக்க ஒரு வீட்டுக்குள்ளே காட்சிகள் நகர அதை தொய்வு ,வெவ்வேறு கோணங்களில் சலிப்பை ஏற்படுத்தாம இரண்டு மணி நேர படத்தை சாதுரியமாக தன் ஒளிப்பதிவால் சபரி நிரூபித்திருக்கிறார். ஜோ கோஸ்டாவின் இசையும் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாகவும், விறுவிறுப்பு குறையாமலும் கவனத்தோடு கையாளப்பட்டிருக்கு .
இன்றைய சூழ்நிலையில் நடக்கின்ற ,பேசப்படுகின்ற பேசும் பொருளாக இருக்கிற ஆன்லைன் சூதாட்டத்தை மையக்கருவாக எடுத்துக்கொண்டு அதில் சிக்கி, இளைஞர்களின் வாழ்க்கையும் குடும்பமும் தடுமாறி போய் அதிலிருந்து மீளவும் முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ் வியல் சிக்கல்களை அழகாக கோர்வையாக்கி படம் எடுத்திருக்கிறார் அபிஷேக் லெஸ்லி.
மிகவும் குறைவான கதாபாத்திரங்களை வைத்துகொண்டு ,,அதோடு நேர்த்தியான தொழில்நுட்ப கலைஞர்களோடும் கைகோர்த்து கொண்டு ,திரைக்கதையிலும் தொய்வில்லாமல், இரண்டு மணி நேரமும் ,நம்மை பட த்துக்குள் பயணிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
