Thursday, April 23

சக்தித் திருமகன்- திரை விமர்சனம்

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் சக்தி திருமகன். இது விஜய் ஆண்டனி அவர்களின் 25 ஆவது திரைப்படம்.

படத்தின் கதையின் நாயகனாக கிட்டு என்னும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் இந்த கிட்டு அரசு தலைமைச் செயலகத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு யார் யாருக்கு எது தேவையோ அதனை நிறைவேற்றித் தரும் கமிஷன் தரகராக உள்ளார். தமிழகத்தில் எதையும் செய்து முடித்து, அதற்கான கமிஷனை பெறுவதன் மூலம் பல கோடிகளுக்கு மேல் பொருள் ஈட்டுகிறார், ஆனால் பெரிய அளவில் ஒரு அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடும்போது மற்றுமொரு அரசியல் சாணக்யனான அபயங்கரின் எதிரியாகிறார். அதன் பின் என்ன நடந்தது ? கிட்டுவின் பின்புலம் என்ன? இதை பற்றி சொல்லுகிறது படத்தின் மீதி கதை .

கிட்டுஎன்னும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி தனிக்கே உரித்த பாணியில் நிதானமாக , ஆனால் ஆழமாக தனது நடிப்பினை சிறப்பாக வெளிபடித்தியுள்ளார். காதல் ஓவியம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்திருந்த கண்ணன் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் திரையில் அபயங்கர் என்னும் பாத்திரம் வாயிலாக மறு திரை பிரவேசம் செய்துள்ளார் அவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை செவ்வனே வழங்கியுள்ளார் .நாயகியாக நடித்திருக்கும் த்ருப்தி ரவீந்திரா ,செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், பெரியாரிசம் பற்றி பேசும் வாகை சந்திரசேகர் என ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் குறைவின்றி தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர். காலிஸ்ட் படத்தின் காட்சிகளுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான படப்பதிவினை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் அமைத்துள்ளார் .விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கும், காட்சிகளுக்கும் இணக்கமாக அமைந்துள்ளது.மாநிலம் முதல் மையம் வரை தங்களுக்கு தேவயானவற்றை செய்து முடிக்க மீடியேட்டர்களின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை திரை மொழியில் படமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் அருண் பிரபு.

மொத்தத்தில் ஆற்றல் மிக்க இந்த ‘சக்தித் திருமகன்’அனைத்து மக்களும் ரசிக்கக்கூடியவன்.

Spread the love