டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லோகா அத்தியாயம் 1: சந்திரா.
பெங்களூர்ல ஒரே வீட்ல வசிக்கிற மூன்று இளைஞர்கள் பெயர் சன்னி, நைஜீல் வேணு இவங்க குடியிருக்கிற வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு புதுசா குடி வராங்க சந்திரா(கல்யாணி பிரியதர்ஷன்)சந்திராவை பார்த்தவுடனே நஸ்லெனுக்கு ரொம்பவுமே பிடிச்சு போயி , சந்திரா மேல காதல் வயப்படுகிறார், அந்த சமயத்துல மனிதனோட உடல் உறுப்புகளுக்காக பல பேர் அந்த நகரத்தில் கடத்தப்படுறாங்க, இந்த சூழ்நிலையில் அந்த குழுவினர் சந்திராவை கடத்த முயற்சிக்கும்போது, சந்திரா எடுக்கிற விஸ்வரூபத்தை பார்த்து, அவர பின் தொடர்ந்து வர நஸ்லென் அதிர்ச்சி அடைகிறார், சந்திரா அபூர்வமான சக்தி கொண்டவர் அப்படிங்கறது அவருக்கு தெரியவருது ,இதன் பிறகு என்ன நடந்தது ?என்பதுதான் படத்தோட மீதிக்கதை.
இதற்கு முன்னால் சில படங்கள்ல நாம பார்த்திருந்த கல்யாணி பிரியதர்ஷன், இந்த படத்துல புது பரிமாணத்தில் தன்னுடைய தோற்றத்தாலும், உடல் மொழியாலும் சிறப்பாக நடித்து, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்காங்க, அதிரடி ஆக்சன் காட்சிகள்ல அவங்களோட பர்பாமன்ஸ் மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கு. கதையின் நாயகனாக நடித்திருக்க கூடிய நஸ்லென் முதலில் கல்யாணி மீது காதலும், பின்பு அவர் யார் என்று தெரிந்த பிறகு அவரைப் பார்த்து பயப்படுவதும், என மாறுபட்ட பரிமாணங்களில் தன்னோட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில், நடன இயக்குனர் சாண்டி தன் மிரட்டலான நடிப்பை இந்த படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார், மேலும் சந்து சலீம் குமார் அருண்குரியன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களை குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.மேலும் கேமியோகளின் பங்களிப்பும் ரசிகர்களுக்கு கூடுதல் ஈர்ப்பை கொடுத்துள்ளது. . 
விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணிக்கும் இந்த படத்தின் காட்சிப்பதிவுக்கும், வேகத்திற்கும் பக்க பலமாக ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியும் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோவும் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். மேலும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பணியினை செய்திருப்பவர் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், இவருடைய பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு மேலும் பக்க பலமாய் அமைந்து காட்சிகளின் தரத்தை மெருகேற்றி உள்ளது .எடுத்துக்கொண்ட கதை களத்திற்கு இணக்கமாக, வலுவான தொழில்நுட்ப பின்னணியை ,அதில் சிறப்பாக பணியாற்றும் தொழில் நுட்பாளர்களின் உறுதுணையோடு, விறுவிறுப்பான படத்தை இயக்குனர் டொமினிக் அருண் கொடுத்துள்ளார்.மேலும் விறுவிறுப்பான திரைக்கதையில், ரசிக்கக்கூடிய காட்சி அம்சங்களினை இணைக்க டாமினிக் அருணுக்கு சாந்தி பாலச்சந்திரனின் உறுதுணையும் கூடுதலாக கரம் கொடுத்துள்ளது .லாஜிக் எல்லாம் பார்க்காமல் முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மட்டும் மனதில் கொண்டு படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் மனதில் எழும் சில வினாக்களுக்கான விடைகள், படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் லோகா அத்தியாயம் 1: சந்திரா நல்லதொரு முழு நீள பொழுதுபோக்கு படம்
