Tuesday, December 30

குற்றம் புதிது- திரை விமர்சனம்

நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் ‘குற்றம் புதிது’ படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார், கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழியும் மற்றும் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

போலீஸ் கமிஷனரா இருக்கிற மதுசூதனன் ராவ் உடைய மகள் சேஸ்விதா வேலைக்கு போயிட்டு வரேன்னு சொன்ன பெண் அடுத்த நாள் காலையில வீட்டுக்கு வராமல் காணாமல் போகவே அவங்களுக்கு என்ன ஆச்சு என்று போலீஸ் டீம் தனிப்படை அமைச்சு விசாரணை செய்றாங்க, அதே நேரத்துல வேறொரு பகுதியில ஒரு சின்ன ரூமுக்குள்ள ரத்த வெள்ளமும் ,அதோட வேட்டல் வென்றாலும்,கூடவே சேசுவிதாவோட போனும் அங்க இருக்கறதால ,போலீஸ் அது சேஸ்விதான்னு முடிவு பண்றாங்க, அந்த அறைக்கு பக்கத்திலேயே ஃபுட் டெலிவரி செய்கிற ஹீரோ தருண் விஜய் தனியாக , தங்கி இருக்கிறார் அவர் கிட்ட நைட்டு என்ன நடந்தது என்று விசாரணைய தொடங்குறாங்க, ஒரு கட்டத்துல அவர் அப்பாவியின்னு முடிவுக்கு வராங்க ,ரத்த கரை படிந்த ஆட்டோவும், ஆட்டோ டிரைவராக இருக்கும் ராம்ஸ் தங்கி இருந்த ரூமுக்குள்ளதான் இந்த சம்பவம் நடந்திருக்கு ,அதனால அவர்தான் குற்றவாளி என்று நினைத்து போலீஸ் அவரை தேடுறாங்க. அப்பாவின்னு நினைச்சு விடுவித்த தருண் விஜய், தான்தான் இந்த கொலையினை செய்தேன், அதோட மேலும் இரண்டு கொலைகளையும் செஞ்சிருக் ன்னு கமிஷனர் ஆபீஸ்ல சரண்டர் ஆகிறார், ஆனா அவர் மனநல பாதிக்கப்பட்டு இருக்காருன்னு போலீஸ் சந்தேகப்படுகிறாங்க , கடைசியில் சேஸ்மிதாவுக்கு என்ன ஆச்சு ? ராம்ஸ்தான் அவங்கள கொலை பண்ணாரா ?,அவர் தலைமறைவாய் இருக்க காரணம் என்ன ? சில கொலைகளை செஞ்சிருக்கேன்னு சரண்டர் ஆகி இருக்கிற தருண் விஜய் சொல்றது உண்மைதானா ?உண்மையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு பதிலாக படத்தின் முடிவு அமைஞ்சிருக்கு.

படத்தை தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் தருண் விஜயின் நடிப்பு பல பரிமாணங்களோடு திரைக்கதையின் திருப்பங்களுக்கு துணையாக அமைந்திருக்கு ,மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், கொலையினைநான்தான் செய்தேன் என்று சொல்கிற காட்சிகளிலும் , உடல் மொழி மாற்றத்தினால் நடிப்பில் புதுமையை செய்ய முயற்சி செய்திருக்கிறார் தருண் விஜய்.

மார்கன் போன்ற சில படங்களில் நடித்திருந்த சேஸ்விதாவின் கதாபாத்திரத்திரம் இந்த படத்தில் திரைக்கதையின் மைய புள்ளியாக இருந்து ,காட்சிகள் நகர்வதற்கு முக்கியமான காரணமாக திகழ்கிறது, அத்தகைய கதாபாத்திரத்தில் சேஸ்விதா நன்கு நடித்திருக்கிறார்.

கோலிசோடா படத்தின் மூலம் அறிமுகமான மதுசூதன ராவ் பல படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை நடித்திருப்பது போலவே இந்த படத்தில் அசிஸ்டன்ட் கமிஷனர் கதாபாத்திரத்தில் சிறப்பாக ஆக நடித்திருக்கிறார். அதிகாரியாக மட்டுமில்லாமல் அன்பான அப்பாவாகவும் மகளை இழந்து தவிக்கும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

ஒரு க்ரைம் திரில்லர் ஜானர் கதையின் தேவைக்கேற்ப காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கு ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கு, அதே போல கரண் பி கிருபாவின் பாடல்களும் பின்னணி இசையும், ஒரு குற்றப் பின்னணியின் கதைக்கு தேவையான் முறையிலும் , தொய்வில்லாத திரைக்கதையின் போக்குக்கு பக்க பலமாகவும் அமைந்துள்ளது.

ஒரு கொலையை படத்தின் கருவாக அமைத்து, அந்த கொலைக்கான காரணங்களையும், அதை மறைக்க நிகழ்த்துகின்ற சம்பவங்களையும், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளையும், எதற்காக அந்த கொலை நடந்தது என்பதையும் கோர்வையாக்கி, திரைக்கதையில் பல திருப்பங்களைக் கொண்டு படம் நகருகிறது. படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்று , படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதையை முற்றிலும் திசை திருப்பி, சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து, குற்றம் புதிது படத்தை நன்கு இயக்கியிருக்கிறார் நோவ் ஆம்ஸ்ட்ராங். லாஜிக்கான சில கேள்விகள் முன் எழுவதும்,அதற்கு சரியான விடையினை கொடுத்திருக்கலாம் என்று தோன்றினாலும், அறிமுக இயக்குனர் எடுத்திருக்கின்ற புது முயற்சிக்கு குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று கடந்து சென்று பாராட்டலாம்.

Spread the love