விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.
வெட்டித்தனமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் முழுக்க பவனி வரும் நாயகன் விஜய் கௌரிஷ் ,அவருடைய வீட்டுக்கு எதிர் புறமாக குடியேறும் ஸ்மேஹா என்னும் பெண் மீது காதல் வசப்படுகிறார், அதே போல விஜய் கௌரிசின் நண்பர் ,ஆதர்ஸூம் ஸ்மேஹாவை விரும்புகிறார், இப்படியாக நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வருகிறார்கள் ,ஆனால் இருவரையுமே நாயகி காதலிப்பதாக தெரிந்தவுடன் நண்பர்களுக்கு இடையே பிரச்சனை வருகிறது ,,ஆனால் நாயகி இருவருமே காதலிக்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது, நாயகி அவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் என்ன ? ஒரே பெண்ணை காதலிக்கும் இரு நண்பர்களின் நிலை என்ன ? என்பதுதான் கடுக்கா படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் கௌரிஷ், அவரது தோழனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், மற்றும் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா என மூன்று முக்கிய கதாபாத்திரங்களும், இந்த படத்தின் மூலம் புது முகங்களாக அறிமுகங்களாகியிருக்கிறார்கள் ,மூவருமே இது தங்களுடைய அறிமுகப்படம் என்று தெரியாத வகையில் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள், மேலும் மஞ்சுநாதன் ,மணிமேகலை ,சுதா என பிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அளவான
நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகத்தில் உள்ளன, பின்னணி இசையினை பொறுத்தவரை கதைக்கு இணக்கமாக வண்ணமாக பாந்தமாக உள்ளது, படத்தின் ஒளிப்பதிவை பொருத்தமட்டில் ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் துரைக்கண்ணு ,கதை நடைபெறும் சூழலுக்கு ஏற்ற காட்சிகளை பதிவு செய்து ,அதற்கு இணக்கமான பின்புலத்தை சரியான முறையில் கொடுக்கும் வகையில் கோணங்களை அமைத்துள்ளார்.
படத்தின் இயக்குனர் எஸ். எஸ். முருகரசு சமகால இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலை பிரதிபலிக்கும் கதைக்களத்தை காமெடி கலந்த காட்சிகளுடன் படமாக்கி உள்ளார். தன்னை காதலிக்கும் இரண்டு இளைஞர்களை ஒரு பெண். அவர்கள் இருவரையுமே தான் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி கடுக்கா கொடுப்பதை படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குனர்.
நகைச்சுவையும், காதலும் கடந்த இந்த கடுக்கா, இளம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்பது நிச்சயம்.
