Sunday, April 19

இந்திரா-திரை விமர்சனம்

இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் மற்றும் பலர் நடிப்பில் ,மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. 

கதையின் நாயகனான இந்திரா (வசந்த் ரவி) போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார், தீவிரமான மதுப்பழக்கம் உடையவரான அவர் குடிப்பழக்கத்தால் விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட, காவல் துறையால் பணியிடை செய்யப்படுகிறார் ,இதனால் ஏற்பட்ட மன வேதனையில் மேலும் குடித்து, தன் கண் பார்வையையும் பறிகொடுக்கிறார்,.அவருடைய மனைவி கயலுக்கு (மெஹ்ரீன் பிர்சாடா) கணவன் மீது மிகுந்த கோபம் ஏற்படுகிறது , இப்படிப்பட்ட சமயத்தில் நகரின் பல இடங்களில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது ,காவல்துறையும் கொலையாளியை தேடி கண்டுபிடிக்க தீவீர முனைப்போடு செயல்பட்டாலும் குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது ,இந்த சமயத்தில் இந்திராவின் மனைவி கயலும் கொலை செய்யப்படுகிறார், வீட்டின் உள்புறமாக தாளிடப்பட்ட நிலையில் கயல் கொலை உண்டு இருப்பதால் அது காவல்துறைக்கு மேலும் குழப்பத்தை தருகிறது ,அதன் பின் இந்திரா தன் மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளியை தன் நண்பரின் உதவியுடன் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கி, அந்த கொலைகார சைக்கோவை கண்டு பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்கிறார்.ஆனால் கொலை செய்யப்பட்ட கயல் யார் என்று கூட எனக்கு தெரியாது என்று அந்த சைக்கோ சொல்ல, கதைக்குள் மேலும் ஆச்சரிய கேள்விக்குறி எழுகிறது .அதன்பின் நட ந்தவைகள் என்ன ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்வது தான் இந்திரா படத்தின் மீதி கதை

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்த்ரவி ,.தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு இணங்க மாறுபட்ட பரிமாணங்களில் தன் நடிப்புத் திறனை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார் ,அவருக்கு இணையாக நாயகியாக நடித்துள்ள மெஹ்ரீன் பிர்சாடா உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை நன்கு வெளிப்படுத்தி ,தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் ,மேலும் சுனில், அனிகா சுரேந்தர், நடன இயக்குனர் கல்யாண் இவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இது போன்ற க்ரைம் சஸ்பென்ஸ் கதைகளுக்கு நேர்த்தியான தொழில்நுட்பாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ,அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ், விறுவிறுப்பான திரைக் கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், காட்சிகளுக்கு மேலும் வலுவூட்ட இசையமைப்பாளர்  அஜ்மல் தஹ்சீனின் பின்னணி இசை, கதைக்கும் ,காட்சிகளுக்கும் இணக்கமாக அமைந்துள்ளது . சண்டை காட்சிகளை ,ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி சிறப்பாக அமைத்துள்ளார்.

கிரைம் த்ரில்லர் பாணியில் கதை கருவைக் கொண்டு ,அதற்கு விறுவிறுப்பான திரைக்கதையும் படைத்து, யூகிக்க முடியாத டிவிஸ்ட்டுகளுடன் காட்சிகளை அமைத்து,  படத்தை திறம்பட இயக்கி உள்ளார் இயக்குனர் சபரீஷ் நந்தா.

மொத்தத்தில் இந்திரா, முழுநீள என்டர்டெயின்மென்ட் திரில்லர் படம்

Spread the love