Wednesday, June 24

’ஹரி ஹர வீரமல்லு’- திரைப்பட விமர்சனம்

பவன் கல்யாண்,நிதி அகர்வால், பாபி தியோல் ,நாசர் ,சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ’ஹரி ஹர வீரமல்லு.இந்தப் படத்திற்கு இசை கீரவாணி.
கதையின் நாயகன் வீரமல்லு, செல்வம் இருப்பவர்களிடமிருந்து அதனை களவாடி இல்லாத ஏழைகளுக்கு தர்மம் செய்யும் நல்ல மனம் படைத்தவர் கதையின் நாயகன் வீரமல்லு.(பவன் கல்யாண் ) வீர மல்லுவுக்கு, நவாப் தரும் வேலையை சவாலாக எடுத்துக்கொண்டு அதன்படி புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை கைப்பற்றி எடுத்து வர முடிவெடுக்கிறார், அந்த வைரம் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பிடம் உள்ளது, அந்த உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை கைப்பற்ற நினைக்கும் வீரமல்லுவின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை .

கதையின் நாயகன் வீரமல்லுவாக பவன் கல்யாண், அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் ,எமோஷன் காட்சிகளிலும் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது ,அவுரங்கசீப்பாக நடித்துள்ள பாபி தியோல் தன்னுடைய பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்துள்ளார். மேலும் சத்யராஜ் ,சுனில், நாசர் போன்றவர்களின் கதாபாத்திரங்களும் அதில் அவர்களின் பங்களிப்பும் நிறைவாக உள்ளது.

திரைத்துறையில் தலைசிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரான தோட்டா தரணியின் கைவண்ணத்தில் கலைநயமிக்க அரங்குகள் காட்சிகளுக்கு இணக்கமாக ,கண்களுக்கு வளமாக அமைக்கப்பட்டுள்ளன.இசையமைப்பாளர் கீரவாணியின் இசை மற்றும் பின்னணி இசை பாடத்திற்கு பெரிய உறுதுணையாக அமைந்துள்ளன.

படத்தின் முதல் முதல் பகுதியில் காணப்படும் வேகமும் விறுவிறுப்பும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் சற்றே தொய்வை ஏற்படுத்துகிறது.முதல் பகுதிக்கு சமமான விறுவிறுப்புடன் இரண்டாம் இருந்திருந்தால், மொத்த படமும் ரசிகர்களின் பெரும் ஈர்ப்பினை பெற்றிருக்கும்.
.
ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா படத்தின் கதைக்கேற்ற பிரம்மாண்டத்தை காட்சி வடிவில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள் .வரைகலை காட்சிகள் இன்னமும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தால் அது படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கும்.

வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்களுடன், கற்பனை சம்பவங்களையும் இணைத்து ஒரு முழு நீள ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படத்தை இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா கொடுத்திருக்கிறார்.

Spread the love