Wednesday, June 24

“மஹாவதார் நரசிம்மா” திரை விமர்சனம்

பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை அனிமேஷன் புராணத் திரைப்படமாக சொல்லும் “மஹாவதார் நரசிம்மா”வை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார்.

இரண்யகசிபு என்னும் அசுரன் எளிதில் தன்னை யாரும் அழித்திட முடியாத வண்ணம் மாபெரும் வரம் ஒன்றை பிரம்மாவிடம் வேண்டி பெற்றுள்ளான், அந்த இரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்னும் மகன் ஒருவன் இருக்கிறான் ,இரண்யகசிபை இறைவனாக வழிபட்டு வணங்கி கொண்டு இருக்கும் ,அந்த நாட்டு மக்கள் மத்தியில் விஷ்ணுவை கடவுளாக துதிக்கிறான் சிறுவன் பிரகலாதன்.அவன் திருமால் மீது எண்ணற்ற பக்தியும் அன்பும் கொண்டு அவரை எப்பொழுதும் தொழுது கொண்டே இருக்கிறான் ,மக்கள் அனைவரும் தன்னை கடவுளாக துதிக்குக் கொண்டிருக்கும் வேளையில் ,தன் மகன் மட்டும் தன்னுடைய எதிரியான விஷ்ணு பகவானை இறைவனாக துதிப்பதா? என்று கோபம் கொள்ளும் இரண்யகசிபு அதனை பொறுத்துக் கொள்ளாத நிலையில் , தன் மகன் பிரகலாதனுக்கு மரண தண்டனை விதிக்கிறார், ஆனால் எத்தனை தண்டனை கொடுத்தாலும் அத்தனை இடையூறுகளிலிருந்தும் திருமாலின் கருணையால் பிரகலாதன் மீண்டு வருகின்றான் ,இறுதியில் தன் பக்தனை காக்கும் பொருட்டும்,இரண்யகசிபை அழிக்கும் பொருட்டும். மகாவிஷ்ணு ,நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபை வதம் செய்து செய்கிறார். இந்தப் புராணக் கதையை அனிமேஷன் வடிவில் சிறப்பான படமாக மகா அவதார் நரசிம்மாவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கதை தெரிந்ததுதான் என்றாலும் ,விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையினால், அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பினை கூட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.கதைக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமான பின்னணி இசையை சாம்.சி .எஸ் கொடுத்துள்ளார். மிகவும் குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் அவரது பின்னணி இசை ,காட்சிகளுக்கு தேவையான விறுவிறுப்பையும் , வேகத்தையும் அதிகரித்து ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது .

புராண கதையை அனிமேஷன் வடிவில் இயக்குனர் அஸ்வின் குமார் சிறப்பாக உருவாக்கியுள்ளார். படித்த கதையை இந்த படத்தின் வாயிலாக , காட்சி வடிவில் பார்க்கும் பொழுது ,கதையின் மாந்தர்களோடு நெருக்கமான பிணைப்பை ரசிகர்கள் நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை ரசித்துப் பார்க்கலாம்

Spread the love