Wednesday, June 24

கதாசிரியர் ஆகும் கதாநாயகன் தமன்.

கதாசிரியர் ஆகும் கதாநாயகன் தமன்.

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது.ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட ,இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தமன் ஆகாஷ், இதற்கு முன் ஆச்சரியங்கள்,சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுனு இருக்கு,கண்மணி பாப்பா,அயோத்தி,ஒரு நொடி,பூங்கா போன்ற பல படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ,அதே போல இந்த ஜென்ம நட்சத்திரம் படத்திலும் அஜய் என்னும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை கொடுத்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

எதிர்பாராத வரவேற்பினையும் ,எதிர்பார்த்தாத வெற்றியையும் ,ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற இப்படக்குழுவினர் , கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற இடங்களில் திரையரங்குகளை பார்வையிட்டு படம் பார்க்கின்ற பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள், இதன் மூலமாக பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் ஜென்ம நட்சத்திரப்பட குழு இதன் நன்றி தெரிவிக்கும் விழா , சந்திப்பு நடந்த போது அந்த நிகழ்வில் பேசிய தமன், இப்படத்தின் TEAM-யோடு மீண்டும் ஜென்ம நட்சத்திரம் படத்தில் இணைந்தது போலவே ,விரைவில் தான் கதை மற்றும் திரைக்கதை எழுதும் படத்தில் இப்படக் குழுவினர்களுடன் இணைந்து விரைவில் ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாகவும் ,அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியையும் சொன்னார், இதே தொழில்நுட்ப கலைஞர்களுடன் அப்படத்தில் பயணிப்பதாகவும் ,முடிந்தவரை கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு, இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகளையும் இணைத்து ,அடுத்த படத்தில் அவர்களுடன்,தான் பயணிக்க போவதாக கதாநாயகன் தமன் அறிவித்துள்ளார், இப்படம் தொடர்பான செய்திகளை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Spread the love