Thursday, March 19

ஸ்கூல்- திரைவிமர்சனம்

ஆர் கே வித்யாதரன் இயக்கத்தில் யோகி பாபு பூமிகா கே எஸ் ரவிக்குமார் பகவதி பெருமாள் நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசை இளையராஜா,ஒளிப்பதிவு ஆதித்யா கோவிந்தராஜ்.ஒரு பள்ளியில் பல மர்மமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இந்த உயிரிழப்புகளை கண்டறிவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டராக கே எஸ் ரவிக்குமார் அந்த பள்ளிக்கு வருகிறார் மற்றும் இந்த பள்ளியில் நடக்கும் மர்ம சம்பவங்களின் ம் தொடர்ச்சியை பற்றி ஆராய ஆர்கே வித்யாதரனும் அந்த பள்ளிக்கு வருகிறார் மேலும் அந்த பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான யோகி பாபு மற்றும் பூமிகா இருவரும் அதே பள்ளிக்கு வருகிறார்கள் அங்கு நடைபெறும் இந்த மர்ம சம்பவங்களுக்கு பின்னணி என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

கனகவேல் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார், மேலும் மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் .அன்பரசி என்னும் ஆசிரியையாக வரும் பூமிகாவின் கதாபாத்திரமும் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது ,அந்த கதாபாத்திரத்தில் அதனை அவர் குறை இல்லா வண்ணம் நிறைவாக செய்துள்ளார் .

மேலும் ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக காளீஸ்வரன் என்னும் கதாபாத்திரத்தில் KS ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் நம்பிராஜனாக பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக சாங்ஸ் ,மந்திரவாதி மஸ்தானாக நினைவுகள் ரவி ,உலகநாத சுவாமி ஆக இயக்குனர் ஆர்கே வித்யாதரன் என பல நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்றாக நடித்துள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ் கதை நடைபெறும் சூழலுக்கு ஏற்ற வகையில் அதற்கு இணக்கமான கேமரா நகர்வுகளை பொருத்தமாக அமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்களை எழுதி இருப்பதோடு இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக உள்ள திரைக்கதைக்கு பொருத்தமான வகையில் ,முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில், உளவியல் ரீதியான திரில்லர் படத்தை இயக்குனர் ஆர்கே வித்யாதரன் உருவாக்கியுள்ளார்.

விடுமுறையில் ஒரு விசிட் இந்த ஸ்கூலுக்கு போகலாம்.

Spread the love