Sunday, August 30

மையல் -திரை விமர்சனம்

APG ஏழுமலை இயக்கத்தில் சேது ,சம்ரிதி தாரா ,பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ள படம் மையல் .

படத்தின் கதையோட நாயகன் ராத்திரி நேரங்களில் ஆடுகளை திருடி விற்று பிழைக்கும் தொழில நடத்திக்கிட்டு வர்றவரு ,ஒரு சமயம் ஒரு கிராமத்துல ஆடு , திருடறப்ப கிராம மக்கள் அவர பிடிக்க துரத்துறாங்க ,ஊர் மக்களுக்கு பயந்து ஓடும் அவர் அங்க இருக்கக்கூடிய ஒரு கிணத்துக்குள் குதிச்சிடுறாரு ,அந்த பகுதியில் இருக்கக்கூடிய காட்டுல இருக்கும் ஒரு பாட்டியுடைய பேத்தி சம்ரிதி தாரா, சேதுவை கிணற்றிலிருந்து மீட்டு காப்பாற்றி தன்னோட வீட்டிலேயே அடைக்கலமும் கொடுக்கிறாங்க , சேது மேல சம்மதி தாராவுக்கு காதலும் பிறக்குது , ஆனா இந்த காதலுக்கு அவங்க பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் தன்னோட ஊர்ல இருக்கிற பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைஞ்சதுக்கு அப்புறம் தன்னோட ஊருக்கு சேது திரும்பி போறாரு, சம்ரிதி தாரா சேதுக்காக காத்திருக்கிறாங்க ,,சொந்த ஊருக்கு போன சேதுக்கு காவல் துறை மூலமாக மீண்டும் பிரச்சினை வருது, இதன் பிறகு என்ன நடந்துச்சு? காவல்துறையிடம் இருந்து சேது விடுதலை பெற்றாரா ?சம்ரிதி தாராவை மீண்டும் சந்தித்து திருமணம் செய்து கொண்டாரா ? அப்படிங்கற தான் படத்தோட மீதி கதை.

படத்தோட கதையின் நாயகனா சேர்ந்து நடித்திருக்கிறார் மைனா படத்துல போலீஸ் கேரக்டர்ல நடிச்சு தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்த இந்த சேது இந்த படத்திலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நல்லாவே நடிச்சிருக்காரு கதையின் நாயகியாக நடித்து இருக்கிறவங்க சம்ரிதி தாரா, கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் ரொம்ப இயல்பாக, அதற்கேற்ற உடல் மொழியோடு, உணர்வுகளை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நல்லாவே நடிச்சிருக்காங்க, இன்ஸ்பெக்டர் சி.எம். பாலா, மற்றும் பி எல் தேனப்பன் சூப்பர் ஹிட் சுப்பிரமணி ,ரத்னகலா போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க.

கிராமிய வாழ்வியலை சித்தரிக்கும் படத்தின் காட்சிகளுக்கு தேவையான பின்னணி இசையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார் அமர்ஜித்.அதேபோல பாலபழனியப்பனோட ஒளிப்பதிவு யதார்த்தமான காட்சிகளின் உண்மைத் தன்மை மாறாமல் இயல்பாக காட்சிகளாய் பதிவு செஞ்சிருக்கு.

இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.மண் சார்ந்த, சராசரி மனிதர்களின் வாழ்வியல் சம்பவங்களை பதிவு செஞ்சு உள்ள ஜெயமோகனின் எழுத்தில் இருந்து, அவற்றின் உண்மை தன்மை மாறாத வகையில், யதார்த்தமான காட்சி அமைப்புகளை கொடுத்து படத்தை இயக்கி உள்ளார் ஏழுமலை.

மையல் -உணர்வுப்பூர்வமான கதையின் காட்சி பதிவு

Spread the love