Wednesday, December 31

ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3-வது பாடல் வெளியீடு

 ஹரி ஹர வீரமல்லு படத்தின் இசை இந்திய அளவில் பேசப்படும் : எம்.எம்.கீரவாணிஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார்  பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா முழுவதிலும் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அசுர ஹானம்.. என்ற வரிகளுடன் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பாடல்  வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை நிதி அகர்வால், தெலுங்கு நடிகர்கள், மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love