Wednesday, April 29

மாமன்- திரை விமர்சனம்

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் -நடிகர் சூரி இணைந்துள்ள ‘மாமன்’ படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருக்கிறார்.இவர்களுடன் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர் , கீதா கைலாசம், பாபா பாஸ்கர்,பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

நம் குடும்பம் என்பது போய் என் குடும்பம் என்று மாறி, அந்த ஒற்றை இலக்குக்காக மனிதனுக்குரிய அடிப்படையான பல விஷயங்களை மறந்து ,அது மருகிப்போகிவிட்டது என்று கூட தெரியாமல் , இந்த இயந்திர  வாழ்க்கைக்குள் வாழ பழகிக் கொண்டோம். ஆனால் இன்னமும் நம் உறவுகளின் உன்னதமும் , அதன் மகத்துவமும் எங்கோ ஒரு மூலையில், முழுமையாக பட்டு போகாமல், இன்னும் கொஞ்சம் ஈரத்தோடு, நம் ஆழ்மனதுக்குள் இருக்கிறது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கும் படம்தான் மாமன்.

திருமணமான 10 வருடங்களுக்குப் பிறகு சுவாசிகா, பாபா பாஸ்கர் தளபதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்குது ,தன்னுடைய அக்கா சுவாசிக்கு பிறந்த பிரகீத் சிவன் குழந்தைக்கு ,தாய் மாமனாக மட்டும் இல்லாம தன் மகனாகவும் வளர்க்கிறார் சூரி ,10 வருடங்கள் கழித்து பிரகீத் சிவன் பிறந்ததால் அந்த குழந்தை, எல்லாருக்கும் செல்ல பிள்ளையாக மட்டும் இல்லாம ,சூரியுடைய அளவில்லாத அன்போடு அழகா வளர, அவன் எது கேட்டாலும் தவறாம செஞ்சு கொடுக்கிற தாய்மாமனாக சூரி இருக்கிறதால ,பள்ளிகூடத்தில படிக்கிற நேரத்தை தவிர மற்ற நேரம் எல்லாம் சூரியோடவே அந்த குழந்தை பிரகீத் சிவன் இருக்கிறார். ஒரு அக்கா மேல இந்த அளவுக்கு அன்பையும், பாசத்தையும், மரியாதையும் கொடுக்கிற சூரியோட குணத்தை பார்த்து நாயகி ஐஸ்வர்யா லெட்சுமி அவரை காதலிக்கிறாங்க, குழந்தை வளர்ந்த பிறகு ,அந்த காதலும் வளர, குழந்தையும் ஒரு பக்கத்தில் வளர்ந்து, ஸ்கூலுக்கும் போயிறாங்க, ஒரு கட்டத்துல சூரி-ஐஸ்வர்யா லெட்சுமி க்கும் கல்யாணம் ஏற்பாடு செய்ய முடிவு பண்றாங்க, கல்யாணமும் அழகா ரெண்டு வீட்டு சம்மதத்தோடவும் நடக்குது , ஆனா அளவு கடந்த தாய் மாமனுடைய பாசத்தினால சூரி தன் அக்கா பையன் மீது இருக்கிற பாசத்தினாலே, நடைமுறையா சில சிக்கல் வருது , அந்த சிக்கல்கள் சண்டையாக மாறிய பிறகு ,உறவுகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த, அந்த பிரிவினையினால கணவன் மனைவியா இருக்கிற சூரி- ஐஸ்வர்யா லெட்சுமி பிரிந்து போக , கடைசில மாமன் -மருமகன் உறவுனால ஏற்படுகின்ற இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன முடிவு ?என்பது தான் படத்துடைய கிளைமாக்ஸ்.

சூரி கதாநாயகனாக அறிமுகமானதிலிருந்து அவருக்கு ஏத்த மாதிரியான கதாபாத்திரங்கள் தொடர்ந்து அவருக்கு அமைவது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கு ,இந்த படத்திலும் ஏராளமான நட்சத்திர பட்டாளங்களோடு தனக்கே உண்டான பாடி லாங்குவேஜோட, சில நேரங்களில் நகைச்சுவையாக, பல  நேரங்களில் நெகிழ்ச்சியான  நடிப்பை தரும் வகையில, இயல்பாக  தன்னோட நடிப்பை வெளிப்படுத்திருக்காரு , அக்கா பையனா ? மனைவியா ? என்னும் தர்ம சங்கடமான சூழ்நிலை நிலவும் காட்சிகளில் அழகா நடிச்சிருக்கார். பல Family Entertainment Subject படங்களில் நகைச்சுவையான கேரக்டர் பண்ணி இருந்த சூரி, இந்த படத்துல ஒரு முழு கதாநாயகனா ,தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியா முறையில பயன்படுத்திக்கிட்டு, சிறப்பா நடிச்சி இருக்காருன்னு சொல்லலாம். குறிப்பா மத்தவங்க யாரும் கிண்டல் பண்ணுவாங்களோனு நெனச்ச சூரி ,அவரையே கிண்டல் செஞ்சுக்குறார்.

,கிரிஜாவாக ஸ்வாசிகா ,பாசமுள்ள அக்காவாக , நேசமுள்ள தம்பி, ஆசையுள்ள மகன் என இருவருக்கும் இடையே உள்ள பாச போராட்டத்தில் மருகும் கதாபாத்திரத்தில் தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பினை ஆழமாக வெளிபடித்தியுள்ளார்.

ஐஸ்வர்யா லெட்சுமி தன்னுடைய கதாபாத்திரத்திக்கு ஏற்ற வகையில் நேர்த்தியான நடிப்பை கொடுத்து மனதை கவர்கிறார். சிறப்பான நடிப்பை வெளிக்காட்ட சிறுவன் பிரகீத் சிவனுக்கு இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளார். மேலும் சிங்கராயராக ராஜ்கிரண், பவுனாக விஜி சந்திரசேகர் மேலும் கீதா கைலாசம், பாபா பாஸ்கர் என எல்லாருமே அவரவர் கதாபாத்திரங்களில் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்ட கதாபத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள்

கிராமத்து வாழ்வியலை ,அதன் யதார்த்தமான தனித்தன்மை மாறாமல் அழகுற காட்சிபடித்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.ஹெஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன

இன்றைய கால கட்டத்தில் கூட்டு குடும்பங்கள் அருகி, கேப்சியுல் குடும்பங்கள் பெருகி வரும் சூழலில், குடும்ப உறவுகளின் அவசியத்தினை, அதன் அருமை பெருமையினை பதிவு செய்து, படம் பார்க்கும் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.

மொத்தத்தில் மாமன் உறவுகளின் மேன்மையின் காட்சி பதிவு .

Spread the love