Wednesday, April 22

‘நாங்கள்’ – திரை விமர்சனம்

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் ,அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் ,மூன்று குழந்தைகளின் உணர்வுகளை திரையில் படமாக சொல்லுகிறது இந்த ‘நாங்கள்’ படம்.

 

ராஜ்குமார் (அப்துல் ரஃபே) பத்மா( பிரார்த்தனா ஸ்ரீகாந்த்) என்னும் தம்பதியினர் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள், இவர்களுக்கு கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) என்னும் மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவர்களுடன் கேத்தி( ராக்ஸி ) என்னும் நாயும் இருந்து வருகிறது, கண்டிப்பும் கறாரும் நிறைந்த அப்பாவிடம் அந்த குழந்தைகள் வளரும் சூழல் ,அந்த மூன்று சிறுவர்களின் உணர்வுப்பூர்வமான உணர்ச்சிப் போராட்டம் இவற்றினை கொண்டு இப்படத்தின் படத்தின் கதை பயணிக்கிறது.

குழந்தை நட்சத்திரங்களாக மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகிய மூவரும் இயல்பான நடிப்பை வெளிபடித்தியுள்ளார்கள், அவர்களின் பெற்றோராக நடித்து இருக்கும் அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த் போன்றவர்களின் நடிப்பும் ,மிகை இல்லாமல் யதார்த்தமாக  உள்ளது.

வேத் ஷங்கர் சுகவனம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் அவரது இசையில் சைந்தவி பாடியுள்ள கனவே மிகவும் ரசிக்கும்படி உள்ளது ,இவர் ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த‌வர். இப்படம் முழுக்க லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடியது .

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற ‘நாங்கள்’ திரைப்படத்தினை அவினாஷ் பிரகாஷ் இயக்கியிருக்கிறார் ,படத்தினை எழுதி இயக்கியதோடு, இந்த படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற முக்கிய துறைகளையும் தானே ஏற்று அவற்றையும் நன்கு கையாண்டுள்ளார். அவர், இந்த படத்தில் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையில், மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள், வாழ்க்கையை எப்படி கற்று கொள்கிறார்கள் ? என்னும் கதைகருவினை எடுத்துக்கொண்டு, அந்த குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமான திரைக்கதையாக்கி, அழகான படமாக்கியுள்ளார்.

‘நாங்கள்’ -குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய படம் .

Spread the love