ஹரிகிருஷ்ணன், லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, மற்றும் பலர் நடிக்க நடித்துள்ளனர்.ஜோஸ்வா சேதுராமன் இயக்கி உள்ள‘ஜென்டில் வுமன்’ படத்துக்கு .கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
கதையின் நாயகன் அரவிந்த்தும் (ஹரி கிருஷ்ணன்),பூரணியும் (லியோமோல் ஜோஸ்) சென்னையில் வசிக்கும் புதுமணத் தம்பதிகள்.நல்லபடியாக போய்க்கொண்டுஇருக்கும் குடும்ப வாழ்க்கையில் ஓர் சமயம் ஒரு நேர்முகத்தேர்வுக்காக பூரணியின் சகோதரி அங்கு வந்து தங்குறார் அந்த சமயத்தில் எதிர்பாராமல் ஏற்படும் ஒரு சம்பவத்தின் மூலம் , பூரணிக்கு தனது கணவன் பற்றிய உண்மை தெரியவருகிறது அதன் பின் நடப்பவை என்ன ? என்பதே ‘ஜென்டில் வுமன்’படத்தின் மீதி கதை.
படம் முழுவதும் பயணிக்கும் மைய கதாபாத்திரத்தில் அழுத்தமான உணர்வுகளை சுமந்து அட்டகாசமாய் நடித்துள்ளார் லியோமோல் ஜோஸ். அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள லாஸ்லியா.தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளார் ஹரி கிருஷ்ணனின் நடிப்பு அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு நல்ல பொருத்தமாக உள்ளது. இன்ஸ்பெக்டராக வரும் ராஜீவ் காந்தியும் குறைவில்லா நடிப்பை தந்துள்ளார்
கதைக்கு பொருத்தமான சூழலில் அமைக்கப்ட்டுள்ள காட்சிகளின் பின்புலத்துக்கு தன் கோணங்களால் மெருகு ஏற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் காத்தவராயன்.அதே போல காட்சிகளுக்கு தேவையான வேகத்தை தன் சிறப்பான கைவண்ணத்தில் நன்கு தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர். காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இணக்கமாய் படம் முழுவதும் பயணிக்கிறது இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை.யுகபாரதியின் பாடல் மற்றும் வசன வரிகள் நேர்த்தியாக உள்ளன .
இன்றைய காலகட்டத்தில் ,செய்திகளில் காணப்படும் சம்பவங்களின் சூழலை கொண்டு, அதை எதிர்பார்க்கவைக்கும் திரைக்கதையுடன் ,நேர்த்தியான தொழில் நுட்ப கூட்டணியினையும் கூட இணைத்துக்கொண்டு, சிறப்பான படமாக திரையில் வலம் வர வைத்துள்ளார் இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன்.
மொத்தத்தில் இந்த ‘ஜென்டில் வுமன்’ பெண்களை மட்டுமில்ல ,ஆண்களையும் வெகுவாக கவர்வாள்.
