இடத்துக்கு இடம் நிறம் மாறும் பச்சோந்திகளை போல, உறவுகளுக்கு ஏற்ப நிறம் மாறும் மனிதர்களின் மனங்களை பற்றி பேசும் 4 கதைகள் கொண்ட படம்தான் நிறம் மாறும் உலகில் .
அம்மாவுடன் நடந்த சண்டையினால் வீட்டை விட்டு செல்லும் அபி (லவ்லின் சந்திரசேகர்). வெளியூரில் உள்ள தன் தோழியை சந்திப்பதற்காக ரயிலில் பயணிக்கிறார் அந்த பயணத்தின்போது அந்த ரயிலின் பயணச்சீட்டு பரிசோதகர் முத்துக்குமாரை (யோகி பாபு) சந்திக்கிறார். அபியின் எண்ணஓட்டத்தினை அறிந்துகொள்ளும் பயணச்சீட்டு பரிசோதகர் , அபிக்கு உறவுகளின் உன்னதத்தினை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் நான்கு கதைகளை சொல்லுகிறார் அதில் மாறுபட்ட வாழ்வியலில் நடைபெற்ற கதைகளங்களில் இடம் பெற்ற மனிதர்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகிறது இதன் காட்சி வடிவங்களே ‘நிறம் மாறும் உலகில்’.திரைப்படமாகும் . .
தாய் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் தாதா கதையில் நட்டி , கனிகா , சுரேஷ் மேனன், ரிஷிகாந்த் .மற்றும் பலர் நடித்துள்ளனர்,கடிமையாக உழைத்து குழந்தைகளை கருத்துடன் வளர்த்து இருந்தாலும், தள்ளாத வயதில் ஆதரவை இழக்கும் வயதான தம்பதியினர் கதை ,இதில், பாரதிராஜா, வடிவுக்கரசி உட்பட பலரும் நடித்துள்ளனர். தாயின் மருத்துவ சிகிச்சைக்காக பொருளீட்ட கொலை செய்யும் அளவுக்கு செல்லும் ஒரு பாசமிகு மகனின் சூழ லை சொல்லும் கதை .இதில், ஆதிரை , ரியோ ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.அம்மா என்ற உறவுக்காக தன்னுடைய காதலினையே இழக்க தயாராக இருக்கும் இளைஞனின் கதை. இதில், துளசி, சாண்டி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
நான்கு கதைகளிலும் பல வாழ்வியல் சூழலில் பயணிக்கும் கதை மாந்தர்களாய் நடித்துள்ள நட்டி , கனிகா, பாரதிராஜா, வடிவுக்கரசி,ஆதிரை , ரியோ ராஜ்,துளசி, சாண்டி அந்த அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு பாந்தமாய் பொருத்தும் அளவுக்கு தங்களது நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். மேலும் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள யோகிபாபு ,லவ்லின் சந்திரசேகர், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, , முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்ரவர்த்தி என பலரும் குறைவில்லா நடிப்பை தத்தம் கதாபாத்திரங்களில் .கொடுத்து நடித்துள்ளார்கள் .
தொழில் நுட்ப அளவில் ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு, கதையின் காட்சிகளுக்கு .உயிர்ப்பு கொடுத்துள்ளது. இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் காட்சிகளுடன் பயணிக்கின்றன, காட்சிகளுக்கு ஏற்ற மீட்டரில்,படத்தொகுப்பாளர் தமிழ் அரசனின் பணி அமைந்துள்ளது. .
நான்கு கதைகள் மூலம் நான்கு கதை மாந்தர்களின் வாழ்வியலை சொல்லி இருக்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளது பாராட்டக்கூடியது .
மொத்தத்தில், உறவுகள் நிறம் மாறினால் உணர்வுகள் தடம் மாறும் என்பதை இந்த ‘நிறம் மாறும் உலகில்’ .இன்னமும் ஆழமாய் பதிவு செய்து இருக்கலாம்.
