Monday, May 25

‘எமகாதகி’ – சினிமா விமர்சனம்

இறந்த உடலை வைத்து அதன் பின்னணியில் மறைமுகமாக நடக்கும் சம்பவங்களை வெளிக்கொண்டு வரும் புதுமையான படம் எமகாதகி.

ஊர் தலைவரா இருக்குற சுபாஷ் ராமசாமி யின் மகள் ரூபா கொடுவாயூர்க்கு சிறு வயதிலே இருந்து மூச்சு திணறல் அடிக்கடி வரும். இவருடைய மகன் சாதி வெறியோடு தலைவர் மகன் என்கிற தோரணையில் சுற்றி வருகிறார் . அந்த ஊருல திருவிழா நடத்துவதற்கான வேலைகள் நடக்குது . எப்போதும் தன் மகளிடமும், குடும்பத்திடமும் அன்பாக பேசும் சுபாஷ் ஒரு நாள் கோபத்துடன் பேச ரூபாவையும் அடிக்கிறார் , இதனை தாங்க முடியாமல் ரூபா அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

சடங்கு எல்லாம் முடிந்து மயானத்திற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கும் போது ரூபாவின் உடல் வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கிறது. பல பல முயற்சிகள் செஞ்சி பார்க்க முடியாமல் போகுது. ஊர் மக்கள் சில பேர் பேய் என்றும் , பல பேர் சாமி என்றும் யூகிக்கிறாங்க. தற்கொலை என்பதுனால போலீசும் வராங்க.ஏன் ரூபாவின் உடல் வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கிறது. அதன் பின்னணி என்ன ? நடந்த சம்பவங்கள் என்ன ? என்பது தான் படத்தோட திரைக்கதை மற்றும் முடிவு .

தெலுங்கில் இருந்து வந்துஇருக்கிற ரூபா கொடுவாயூர் தமிழில் அறிமுகமாகி இருக்காங்க. சில காட்சிகளில் உயிருடன் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் , உயிரற்ற நிலையில பல காட்சிகளில் ஊர் மக்களை மட்டும் இல்லாமல் நம்மையும் மிரட்டியிருக்காங்க. கதாநாயகனாக நரேந்திர பிரசாத், ஊர் தலைவராக வரும் சுபாஷ் ராமசாமி மற்றும் படத்துல நடிச்சிருக்குற பிற நடிகர்களும் அவங்களோட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமா நடிச்சிருக்காங்க . குறிப்பா ரூபாவுக்கு அம்மாவாக நடித்து இருக்குற கீதா கைலாசம் கிளைமாக்ஸ்ல பேசுற வசனம் படத்தோட மொத்த கருத்தையும் தன் நடிப்பின் மூலம் யதார்த்தமா வெளிப்படுத்திற வகையில நடிச்சு இருக்காங்க.

கதைக்கும், காட்சிக்கும், தேவையான ஒளிப்பதிவை செய்து இருக்கிறார் சுஜித் சாரங். ஜெசின் ஜார்ஜின் இசையும் , பின்னணி இசையும் படத்துக்கு பலம். எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கின் பங்களிப்பு, திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கு.

தற்கொலை செய்து கொண்ட ஒரு உடலை மையமாக வைத்து கற்பனை கலந்து, வெகு யதார்த்தமாக காட்சிகளை ஒருங்கிணைத்து தொய்வு இல்லாத திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.

கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியிருக்கும் இந்த ‘எமகாதகி’ அனைவரையும் ரசிக்க வைக்கும்.

Spread the love