நேர்மையான பதிவு அதிகாரி சமுத்திரகனியின் மகனாக நேர் எதிர்மறையான குணத்தை கொண்ட பொறுப்பில்லாத மகனாக தன்ராஜ் உள்ளார். தந்தையின் அறிவுரைகளை அறவே ஏற்றுக் கொள்ளாத மகனான தன்ராஜ் பல தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார் ஒரு கட்டத்தில் தந்தையின் கையெழுத்தை போலியாக போட்டு சிக்கியும் கொள்கிறார் தந்தையே அவரை காவல்துறையிடம் பிடித்து தருகிறார் தொடர்ந்து பல தவறுகளை செய்த வண்ணமே இருக்கும் தன்ராஜ் ஒரு கட்டத்தில் தனது தந்தையை கொல்லவும் நினைக்கிறார், அது எதனால்? இறுதியாக என்ன நடந்தது என்பதை ராமம் ராகவம் படத்தின் மீதி கதை.
பொறுப்பான நேர்மையான தந்தையாக சமுத்திரகனி இந்த படத்தில் நடித்துள்ளார் இதுபோன்ற கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்பதற்கு முற்றிலும் பொருத்தமாக இருப்பவர் இவர் தான் என்பதைப் போலவே, இவரின் கதாபாத்திரத் தேர்வு அமைந்துள்ளது. அவரும் படம் துவங்கியதில் இருந்து இறுதிவரை அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார், அவரின் மகனாக தன்ராஜ் நடித்துள்ளார், தந்தைக்கு நேர் எதிரான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், பல பரிமாணங்களை தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் வெளிக்காட்டி, நன்கு நடித்துள்ளார். இந்த படத்தை இவரே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மா கதாபாத்திரத்தில் பிரமோதினியும், துணை கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் மற்றும் சுனில், சத்யா, பிரித்விராஜ் போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவாக நினைத்துள்ளார்கள்.
சென்டிமென்ட், ஆக்சன் கலந்த கதைக்கு, நேர்த்தியான திரை வடிவம் கொடுத்து, படத்தை தன்ராஜ் சிறப்பாக இயக்கி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லி பிரசாத்தின் படப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் அருண் சிலுவேருவின் இசையில் படத்தின் காட்சிகளுக்கு பக்காவான பின்புலம் கிடைத்துள்ளது.
தந்தை மகன் இடையேயான கருத்து மோதல்களை மையமாகக் கொண்டு, பல திரைப்படங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும், அதில் புதிய தொரு பாணியில்,திரைக்கதை காட்சிகளைக் கொண்டு உணர்வு பூர்வமான, திரைப் படமாக திரையில் மிளிர வைத்து உள்ளார் இயக்குனர் தன்ராஜ் கொரனானி.
