சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’
முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) ஒரு கொலை குற்றத்திற்காக போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதை அறியும் அர்ஜுன் (அகாஷ் முரளி) அவரைக் காப்பாற்றுவதற்காக தேடி செல்கிறார் ,தன் முன்னாள் காதலியை சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வர அந்த காதலன் செய்யும் முயற்சிகள் இறுதியில் வெற்றியை கொடுத்ததா ?இல்லையா ?என்பதே நேசிப்பாயா படத்தின் மீதி திரைக்கதை.
படத்தில் கதையின் நாயகனாக ,இளம் காதலனாக ஆகாஷ் முரளி நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரரும் ஆவார். .இந்த இரண்டு அம்சங்களும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே கதையின் நாயகனை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தது, மேலும் இயக்குனர் விஷ்ணுவர்தன் சிறிய இடைவெளிக்குப்பின் இயக்கும் படம் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்புகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன என்று சொல்லலாம் .
அறிமுகப்படத்தில் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆகாஷ் முரளி நடித்துள்ளார்.மேலும் இனிவரும் படங்களில் இவர் தன் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் அமையும் பொழுது,அதனை அவர் நன்றாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கலாம் .கதையின் நாயகியாக நடித்துள்ள அதிதி சங்கர் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நல்ல விதத்தில் நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பூ, கல்கி கோய்ச்லின் போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
காதலும் ,அதனுடன் ஆக்ஷனும் கலந்த கதையில் ,அதற்கேற்ப இணக்கமாக , சிறப்பான பின்னணி இசையினையும் ,இனிமையான பாடல்களையும் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.அறிந்தும் அறியாமலும் ,ஆரம்பம் என இளைஞர்களை பெரிதும் கவரக்கூடிய படங்களை இயக்குவதில் தனக்கென தனி பாணியைக் கொண்டவர், இயக்குனர் விஷ்ணுவர்தன். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் பெரும்பான்மையான வகையில், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான காட்சிகளை கொண்டு இந்த படத்தினை அவர் உருவாக்கியுள்ளார் . ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிச்சினும் , படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் தேவையான பின்புலத்தையும்,விறுவிறுப்பையும் கொடுத்து தங்கள் பங்குக்கு குறைவின்றி நிறைவாக பணியாற்றி உள்ளார்கள்..
“நேசிப்பயா’ – இளைஞர்களை கவரும் காதலும் ஆக்ஷனும் கலந்த பொழுதுபோக்கு கொண்ட படம் ..
