இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”

கதையின் நாயகன் சித்தார்த்(ரவிமோகன்) பெங்களூரில் உள்ளார் அவருக்கு திருமணம் ,குழந்தை பேறு என்றாலே வெறுப்பாக இருக்கக்கூடிய மனோநிலை கொண்டவர், அதற்குக் காரணம் அவர் விரும்பிய பெண் நிச்சயதார்த்தன்றே வராமல் போனதால் மனவிரக்தியில் இருக்கிறார், சென்னையில் வசிக்கக் கூடியவர் ஸ்ரேயா (நித்யாமேனன்) அவர் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இப்படிப்பட்ட மனவியல் கொண்ட இருவரும் சந்திக்கிறார்கள். அதன்பின் அவர்களது வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது ?என்பதே காதலிக்கு நேரமில்லை படத்தின் மீதி கதை.
ரவி மோகன் ,நித்யா மேனன் இருவருமே இந்தக் கால இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிற கதாபாத்திரங்களினால் அவர்கள் ,தங்களுடைய வாழ்க்கையை எந்த விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளார்கள். ரவி மோகன் ,நித்யா மேனன் இருவருமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளது குறிப்பிட்டு சொல்லக்கூடியது. மேலும் ரவி மோகனின் நண்பர்களாக வரும் யோகி பாபுவின் கதாபாத்திரமும் அதை அவர் வெளிப்படுத்தி இருப்பதும் ரசிக்கும் படியே உள்ளது. மற்றும் .T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளனர்..

படத்தின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஏ ஆர் ரகுமான் தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை மட்டுமல்ல, எதிர்கால இளைஞர்களின் வாழ்வியலையும் பேசு பொருளாக கொண்டு, இந்த படத்தினுடைய கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து, சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, வண்ணமயமான காதல் இசையினை படமாக்கி கொடுத்துள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி,இயக்குனருக்கு பக்கபலமாய் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரியின் கோணங்களும், படத்துகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் பங்களிப்பும் நேர்த்தியான ஒத்துழைப்பை கொடுத்துள்ளது
காதலிக்க நேரமில்லை படத்தை பார்ப்பதற்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்கி பார்க்கலாம்.
