Saturday, May 2

ஐடென்டிட்டி -திரை விமர்சனம்

அகில் பால் -அனஸ்கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டி(IDENTITY).. இந்தப் படத்தில் திரிஷா, டோமினோ தாமஸ் ,வினய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

துணிக்கடை ஒன்றில் பெண்கள் கோடை மாற்றும் அறையில், கைபேசியினை மறைத்து வைத்து அவர்களை ஆபாசமாக படம் எடுத்து பின்பு அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறான் ஒருவன்.அப்படி மிரட்டும் நபரின் இருப்பிடத்திற்கே சென்று அவனை கொலை செய்கிறார் ஒரு மர்ம நபர் ,அந்தக் கொலையாளியை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக அலிஷா (த்ரிஷா)உள்ளார். ஆலன்ஜேக்கப் என்னும் காவல் அதிகாரி இந்த கொலை வழக்கை புலனாய்வு செய்கிறார் .கொலையாளியை பற்றிய அடையாளங்களை அலிஷா சொல்ல சொல்ல அதை அப்படியே ஓவியமாக வரையும் திறன் கொண்ட ஹரன் சங்கரின் உதவியினை ஆலன் கூறுகிறார் அதன்படி அலிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து ஹரன் வரையும் பட ஓவியத்தின் முகச்சாயல் ஹரனின் முகத்தையே ஒத்திருக்கிறது. இந்நிலையில் திரிஷா ஒரு நோயால் அவதிப்படுவதால் அவரால் சரியாக நினைவுகளை மீள் கொள்ள முடியவில்லை என்பதனை ஆலன் தெரிந்து கொள்கிறார் இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் திரிஷா ,டோவினோ தாமஸ் ,வினய் நடித்துள்ளார்கள். ஹரன் என்னும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தனித்துவமான திறன் படைத்தவராக டோமினோத் தாமஸ் சிறப்பாக நடித்துள்ளார்.முழுக்க முழுக்க கதையோடு பயணிக்கும், முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார் .நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பான முக பாவங்களை வெளிப்படுத்தி நன்கு நடித்துள்ளார். காவல் அதிகாரியாக நடித்துள்ள வினையின் நடிப்பும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க வகையில் நன்றாக உள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்ற கிரைம் தில்லர் ஜானலில் நடைபெறும் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான பங்காக இருக்க வேண்டும், அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, திரைக்கதை நகரும் வேகத்திற்கு ஏற்ப, கதையோடு பயணித்து, ரசிகர்களை காட்சியுடன் ஒன்ற வைக்கிறது.அகில் சார்ஜ் இன் ஒளிப்பதிவும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பும் ,இயக்குனர்களின் கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளன.தரமான இசை ,தெளிவான ஒளிப்பதிவு ,விறுவிறுப்புக்கு துணை நிற்கும் படத்தொகுப்பு என மூன்று தொழில்நுட்பாளர்களின் உறுதுணை இந்தப் படத்தை சிறந்த கிரைம் திரில்லர் ஜானர்பட வரிசையில் இடம் பெற வைக்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் விறுவிறுப்பான திரைக்கதையுடன்,அடுத்தடுத்த டிவிஸ்டுகளுடன் சிறப்பான முறையில் இயக்குனர்கள் அகில் பால் -அனஸ்கான் படத்தை இயக்கியுள்ளார்கள்.

அகில் சார்ஜ் இன் ஒளிப்பதிவும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பம் இயக்குனர்களின் கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளன.
தரமான இசை ,தெளிவான ஒளிப்பதிவு ,விறுவிறுப்புக்கு துணை நிற்கும் படத்தொகுப்பு என மூன்று தொழில்நுட்பாளர்களின் உறுதுணை இந்தப் படத்தை சிறந்த கிரைம் திரில்லர் ஜானர் பட வரிசையில் இடம் பெற வைக்கிறது..

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப் பெரிய திரை விருந்து.

Spread the love