ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர் .தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகன் ராம்நந்தன் (ராம்சரண்) ஐஏஎஸ் அதிகாரியாக விசாகப்பட்டினத்திற்கு வருகிறார்,தான் பதவியேற்றுள்ள மாவட்டத்தில் உள்ள குற்றச்சம்பவங்களை களையும் பொருட்டு தீவிரமாக பணியில் ஈடுபடும் ராம் நந்தனுக்கு, முதல்வரின் மகனும் அமைச்சருமான மோபிதேவியுடன் (எஸ்.ஜே.சூர்யா) மோதல் ஏற்படுகிறது ,முதல்வரின் பதவியையே கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மோபிதேவி, அதற்காக தன் தந்தையை கொல்ல திட்டமிடுகிறார் ,ஆனால் முதலமைச்சர் தான் இறப்பதற்கு முன்பாக தனது வாரிசாக யாரை தேர்வு செய்து வைத்திருக்கிறார் ? என்று ஒரு வீடியோவை பதிவு செய்கிறார். அந்த வீடியோவினால் மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்படுகிறது ,இதற்குப் பிறகு பிறகு ராம்நந்தன் -மோபி தேவிக்கு இடையே மோதல் அதிகமாகின்றது ,இறுதியில் ராம்நந்தன் மோபி தேவியை எப்படி வீழ்த்தினார் என்பதை படத்தின் கதை.
கதையின் நாயகனாக ராம் நந்தன் ,அப்பன்னா என்ற இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ராம்சரண் சிறப்பாக நடித்திருக்கிறார்.அதிரடி ,ஆக்சன் காட்சிகளில் தன் முத்திரையை பதித்து, ரசிகர்களை மீண்டும் கவர்கிறார்.அதிரடியான நாயகனுக்கு, எதிர்மறை நாயகனாக ,ஆக்ரோஷமான வில்லனாக எஸ் ஜே சூர்யா அதகளப்படுத்தி இருக்கிறார்.நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி பாடல் காட்சிகளில் அழகு பதுமையாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நிறைவாக நினைத்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம் ,ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ,இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு பிரேமையும் ,கண்களுக்கு விருந்தாக, அழகாக செதுக்கி பதிவு செய்துள்ளார்.தான் இயக்கும் படங்களுக்கே உரித்தான, காட்சிகளில் பிரம்மாண்டம் ,கண்கவரும் அரங்கங்களில் பாடல் காட்சிகள் என வழக்கமான தனது முத்திரைகளை பதிவு செய்துள்ள இயக்குனர் ஷங்கர், தெலுங்கு பட ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்களையும் சேர்க்க தவறவில்லை ..படத்தின் இசையமைப்பாளர் தமன்,.இவரது இசையில் இப்படத்தின் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் சிறப்பாக உள்ளது ,விறுவிறுப்பான காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை அவரது அதிரடியான பின்னணி இசை சிறப்பாக கொடுத்து கதையோடு பயணித்துள்ளது..
.
பொங்கல் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்க ,பார்த்து ரசிக்க கூடிய முழு நீள ஆக்சன் என்டர்டைன்மென்ட் படம்தான் இந்த கேம் சேஞ்சர்.
