SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.
சென்னையில் பணியாற்றும் இளைஞன் சத்யா (ஷேன் நிகம் )தன் காதலியுடன் கரம் கோர்த்து இல் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் மணவிழாவிற்கு செல்ல, புதுக்கோட்டைக்கு செல்கிறார் .திருமணத்திற்கு முதல் நாள் தன் காதலியை பார்க்க காரில் செல்லும் வழியில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணின் மீது காரை காரை மோதி விடுகிறார் அந்த விபத்திற்கு பின் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலை என்னவாயிற்று ?சத்யாவின் திருமணம் நடைபெற்றதா ?இந்த விபத்திற்கு பிறகு சத்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள்?என்ன என்பதே மீதி படத்தின் கதை .
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம்,சத்யா என்னும் கதாபாத்திரத்தில் இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்அவர் இப்படத்தில் , தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவச்சிக்கல்களினால் உழன்று தவிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்.தொடர்ந்து பல தமிழ் படங்களில் இவரை பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. .துரைசிங்கம் என்னும் கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார் கலையரசன். மேலும் மீரா என்னும் கதாபாத்திரத்தில் நிஹாரிகா, கல்யாணி என்னும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா தத்தா, கீதா கைலாசம், பாண்டியராஜன் தீபா,கருணாஸ் ,சூப்பர் சுப்பராயன் போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள்.
மக்களின் வாழ்வியலை தனது காட்சிகளால் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார்.காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தை தரும் பின்னணி இசையின் மூலமும், நல்ல பாடல்கள் வாயிலா கவும் , இசையமைப்பாளர் சாம்.சி .எஸ் இயக்குனருக்கு பக்க பலமாக பணியாற்றியுள்ளார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதே, இப்படகதையின் மைய நாடியாக உள்ளது , ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக மாறி இருவரின் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையுடன் படமாக உருவாக்கியுள்ளார் .ரங்கோலி படப்புகழ், இயக்குநர் வாலி மோகன் தாஸ்,.
