தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி. ஹவுஸ் ப்ரொடக்சன் நிறுவன நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வணங்கான்.இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் சேமித்துள்ளார் படத்திற்குப் பின்னணி இசை சாம் சி எஸ் அமைத்துள்ளார்.
வணங்கான் திரைப்படத்தில் கதையின் நாயகனாக போட்டி என்னும் கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளி இளைஞராக அருண் விஜய் நடித்துள்ளார் அவரது தங்கை தேவி இருவருமே ஆழிப்பேரலையினால் பெற்றோரை இழந்தவர்கள் தன் முன்னே நடக்கும் அநீதிகளை கண்டால் கோபப்படக்கூடிய கோட்டி மீது காதல் கொண்டுள்ளவராக உள்ள டீனா , கன்னியாகுமரி பகுதியைச் சுற்றி பார்க்க வரக்கூடிய சுற்றுலா வாசிகளுக்கு கைடாக இருக்கிறார் கோட்டி மீது பாசம் கொண்ட சர்ச் பாதர் அவரை மாற்றுத்திறனாளிகளின் காப்பகத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்இப்படி சென்று கொண்டிருக்கும் கோட்டியின் வாழ்க்கையில் அவர் பணிபுரியும் காப்பகத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது ,அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டியிடம் முறையிட அதன்பின் போட்டி எடுக்கும் முடிவு அதன்பின் நடக்கும் சம்பவங்களே மீதி திரைக்கதை ஆகும்.
கோட்டி கதாபாத்திரத்தில் கதை நாயகனாக நடித்துள்ள அருண் விஜய்க்கு இந்த படம் அவரது திரை வாழ்கையில் ஒரு முக்கியமான படமாக அமையும் .இயக்குனர் உருவாக்கிய கதாபாத்திரத்தை இயக்குனர் விரும்பிய வண்ணம் சிறப்பாக நடித்து தன் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார் .நாயகியாக நடித்துள்ள ரோஷினி பிரகாஷ் மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிதா இருவருமே தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார்கள் .மேலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரங்களில் காவல்துறை திறப்பு அதிகாரியாக நடித்துள்ள இயக்குனர் சமுத்திரகனி, நீதிபதி குபேரனாக நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் போன்றவர்களின் கதாபாத்திரங்களும் அதனை அவர்கள் தங்கள் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பதும் பாராட்டுக்குரியது .

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஒளிப்பதிவாளர் ஆர் பி குரு தேவியின் கேமரா ,குமரியின் வனப்பை செவ்வனே பதிவு செய்துள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் நன்கு அமைந்துள்ளன .
.சாமானிய மனிதர்களின் வாழ்வியலில் ,அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் ,வலிகளையும் பதிவு செய்வதில் இயக்குனர் பாலா திறமை மிக்கவர், அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து, 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் ,வெளியாகி உள்ள இந்த வணங்கான் திரைப்படத்திலும் ,அவர் தனது முந்தைய படங்களைப் போலவே ,இந்தப் படத்திலும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலை திரைக்கதையாக்கியுள்ளார்..அவரது படங்களுக்கு என்றே இருக்கும் தனித்துவமான காட்சிகளும் ,கதாபாத்திரங்களும் இந்த படத்திலும் இருக்கின்றன.கதையின் மாந்தர்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் .அவருக்கு பக்கபலமாக பணியாற்ற சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, இந்த வணங்கானை அவர் உருவாக்கியுள்ளார்.
வணங்கான்- பார்ப்பதற்கு உரியவன்.
