’துருவங்கள் பதினாறு’ படதினை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் , அம்மு அபிராமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற இலட்சிய கனவில் உள்ள இளைஞர் அதர்வா முரளி. பல தயாரிப்பாளர்களிடமும் கதை சொல்லியும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கிறார்.ஒரு பிரபல இயக்குனரிடம் கதை சொல்ல, அந்த கதை களவாடப்படுகிறது .அதனால் மேலும் ஏற்பட்ட விரக்தியில் அதிக அளவில் போதை மருந்துகள் உட்கொள்கிறார் அது பகுதியில் உள்ள பள்ளி மாணவர் துஷ்யந்த் தனது தோழி காரில் கடத்தப்படுவதை பார்க்கிறார்.மறுபுறம்ஆசிரியர் ஒருவர் தன் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் . இதை விசாரிக்கும் ஒரு காவல் துறை அதிகாரி .இந்த மூன்று சம்பவங்களும் எப்படி இணைகிறது அதன் பின்னர் நடைப்பவை என்ன ?என்பதுதான் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் கதை.
அதர்வா, ரகுமான், சரத்குமார் போன்றவர்களின் மாறுபட்ட கதாபாத்திரங்களும் அதை அவர்கள் ஏற்று நடித்த விதமும் சிறப்பு..மேலும் துஷ்யந்த்,அம்மு அபிராமி, சந்தானபாரதி போன்றோரும் நன்கு நடித்துள்ளார்கள்
துருவங்கள் பதினாறு என்ற வித்தியாசமான த்ரில்லர் படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த கார்த்திக் நரேன் இந்த த்ரில்லர் கதையினையும், வலுவான தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்,கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளது பாராட்டுக்குரியது.இயக்குனருக்கு உறுதுணையாக பலமான தொழில் நுட்பத்தை ஜேக்ஸ் பிஜாயின் இசை, டிஜோ டாமின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித்தின் படத்தொகுப்பு போன்றவை கொடுத்துள்ளன
இளைஞர்களை இந்த படம் நிச்சயம் கவரும்.
