பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி.

மெக்கானிக் இளைஞர்கள் இரண்டு பேர் திருச்சூரில் உள்ளார்கள், அதில் ஒருவர் டான் (சாகர் சூர்யா) மற்றும் ஒருவர் சிஜு (ஜுனைஸ் விபி) இந்த இரு இளைஞர்களும் ஏடிஎம்மில் ஒருவரைக் கொன்று விடுகிறார்கள் இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் ? என்று காவல்துறை குற்றவாளிகளை வலைவீசி தேடுகிறார்கள் அதே திருச்சூரில் உள்ள பிரபலமான தாதாக்களில் ஒருவரான கிரி (ஜோஜு ஜார்ஜ்) தன் நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்துவதோடு ஆள் மற்றும் அதிகார பலம் மிக்க பெரிய தாதாவாக வலம் வருபவர், இந்த சூழலில் டான் மற்றும் சிஜுக்கும் கிரிக்கும் பிரச்னை எழுந்து மோதல் ஏற்படுகிறது அதன்பின் கிரியும் அவரது நண்பர்களும் டான் மற்றும் சிஜுவை மும்முரமாக தேடுகின்றார்கள்,.இந்த இரண்டு இளைஞர்களுக்கும், கிரிக்கும் இடையே ஏன் ?எதனால் ?என்ன மோதல் ஏற்படுகிறது ? கடைசியில் யார் வென்றார்கள் என்பதே மீதிக்கதை ஆகும் .
ஜோஜு ஜார்ஜ் தாதாவாக நடித்துள்ளார். பாசம், நட்பு கலந்த ஆக்ஷன் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்.அபிநயாவின் கதாபாத்திரமும் ,அதில் அவரது நடிப்பும் சிறப்பு . இரண்டு இளைஞர்களாக சாகர் சூர்யா, ஜுனாயஸ் வி.பி இருவரும் அமர்க்களமாக நடித்துள்ளர்கள். இருவரும் தங்களது நடிப்பால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்வார்கள்.மேலும் சீமா சசி தன் அனுபவ நடிப்பை பதிவு செய்துள்ளார். மற்றும் பிரசாந்த் அலெக்சாண்டர், ரஞ்சித் வேலாயுதன் பாபி குரியன் போன்றோரின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது.
வேணு ஐஎஸ்சி மற்றும் ஜின்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவும், மனு ஆண்டனியின் படத்தொகுப்பும், விஷ்ணு விஜய் – சாம் சி எஸின் பின்னணி இசையும் இயக்குனரின் கதையோட்டத்துக்கு பக்க பலமாய் நின்றுள்ளது
இந்த ‘பணி’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்..நடிப்போடு, இயக்கத்திலும் தன்னுடைய முத்திரை பதித்து ரசிகர்களிடம் பாராட்டினை பெறுகிறார்..
‘பணி’-அதிரடி ஆக்ஷன் நிறைந்த திரைப்பணி.
