பராரி பட திரைவிமர்சனம்!

கதை நடைபெறும் களம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளார்கள். அதில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கதையின் நாயகன் ஹரி உள்ளார் .இந்த இரு தரப்பு மக்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.. இந்த சூழலில் அந்த சமூக மக்களில் சிலரை கர்நாடகாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு அழைத்து செல்கின்றார்கள் .ஆனால் அங்கும் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் பராரி படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் மாறனாக நடித்திருக்கும் ஹரிசங்கரின் கதாபாத்திர படைப்பும் ,அதனை சிறப்பாக அவர் வெளிப்படுத்தி இருப்பதும் யதார்த்தமான முறையில் நன்கு உள்ளது . நாயகி தேவகியாக நடித்துள்ள சங்கீதா கல்யாணும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் குரு ராஜேந்திரன், பிரேம்நாத், புகழ் மகேந்திரன் என மற்றவர்களும் நன்றாக நடித்துள்ளனர்.
மக்களின் வாழ்வியல் பேசும் கதைகளை பதிவு செய்வதில் ஒளிப்பதிவுக்கும் பெரும் பங்கு இருக்கவேண்டும், அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் பணி சிறப்பானது.படத்தொகுப்பாளர் சாம் ஆர்டிஎக்ஸ், கதையின் ஓட்ட த்துக்கு உறுதுணையாக நின்றுள்ளார்..ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் . பின்னணி இசையும் குறை காண வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
புதுமுக இயக்குநர் எழில் பெரியவேடி.அறிமுக படத்திலேயே சமூகப் பிரச்னைகளை பேசும் கதையினையும் காட்சிகளையும் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து வரும் படங்களில் இவரது கருத்தினை இன்னுமும் அவர் கதையின் வாயிலாக உரக்க சொல்லுவார் என்று எதிர்பார்க்கலாம். .
பராரி-கருத்தாளன்
