இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.
ஏதேனும் ஒரு பொய்யை காரணமாக வைத்து மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பதை தனது வாடிக்கையாக கொண்ட வாழ்க்கை முறையில் இருப்பவர் கவின்,அவருடன் ,சிறுவன் ஒருவனும் உடன் இருக்கிறான்.ஒரு சமயம் கவின் பிற பிச்சைக்காரர்களுடன் அரண்மனை போன்ற ஒரு மாளிகைக்கு விருந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.மாளிகையின் பிரமாண்டத்தை கண்டு அதிசயிக்கும் கவின் விருந்துக்கு பின் ஒருவரும் அறியாத சூழ் நிலையில் அந்த மாளிகைக்குள் சென்று விடுகிறார். ஆனால் ,அதன் பின் பெரிய இக்கட்டான சிக்கலில் அவர் மாட்டிக்கொள்கிறார்,அந்த சிக்கல்களுக்கு யார் காரணம்?அதிலிருந்து கவின் எப்படி வெளியே மீண்டு தப்பித்து வர முடிந்தது ? என்பது படத்தின் மீதிக்கதை.
டாடா மற்றும் ஸ்டார் படங்களுக்கு பிறகு புதிய பரிமாண கதாபாத்திரங்களில் நடித்து வரும் கவின், அவரது தோற்றத்துக்கும் உடல் மொழிக்கும் நிறைய கவனம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நன்கு நடித்துள்ளர் மேலும் ரெடின் கிங்ஸ்லியும் தனிக்கே உரிய பாணியில் நன்கு நடித்து அவரது கதாபாத்திரத்தின். வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
டார்க் காமெடி கதைக்களத்தில் கதையினை உருவாக்கி ,பொருத்தமான நடிகர்கள் தேர்வு செய்து நடிக்க வைத்து ,நிறைவான காட்சி அமைப்புகளுடன்.அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இசை அமைப்பாளர் ஜென் மார்டினின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு உறுதுணையாக படம் முழுவதும் பயணித்துள்ளது..ஒளிப்பதிவாளர் சுஜித் சரங், படத்தொகுப்பாளர் நிர்மல் போன்ற தொழில் நுட்ப கலைஞர்கள், படத்தின் காட்சிகளுக்கு தேவையான அளவுக்கு, தங்களுடைய பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
மொத்தத்தில் இந்த ‘ப்ளடி பெக்கர்’-விழாக் கால விடுமுறையில் பார்க்க தகுந்தவன்.
