Monday, May 25

’ஐந்தாம் வேதம்’ – விமர்சனம்

ZEE5 நிறுவனத்தின் அடுத்த ஒரிஜினல் மித்தாலஜி திரில்லர் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, காசிக்கு செல்கிறாள் அப்போது அவள் சந்திக்கும் ஒருவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அனுவிடம் கொடுத்து அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடையப் போராடுவது அவளுக்குத் தெரிய வருகிறது.. தன்னை சுற்றி சூழும் பல ஆபத்துககளையும், இடையூறுகளையும் தாண்டி ,அனு தன் பயணத்தில் எப்படி வெற்றி அடைந்தாள் ? என்பதே ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.

இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார். அவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன் ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோரும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்கள்

இது போன்ற திரில்லர் கதைகளுக்கு பெரியதொரு பின்புல உறுதுணையை கொடுத்து, காட்சிகளை மேலும் சிறப்பாக்குவதற்கு, ஒளியும் ஒலியும் மிகவும் இன்றியமைதவையாக உள்ளன, அந்த வரிசையில் இந்த சீரிஸில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜனின் கை வண்ணத்தில் காட்சி அமைப்புகளும், இசை அமைப்பாளர் ரேவாவின் பின்னணி இசையும் கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளன. கலை இயக்குநர் ஏ.அமரன் தன்னுடைய நேர்த்தியான பணியின் மூலம் காட்சிகளின் பின்புலத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்

ஆன்மீகம், மர்மம், அறிவியல் இவை யாவற்றையும் ஒரு சேர கலந்து பரபரப்பான திரில்லராக இயக்குநர் நாகா உருவாக்கியுள்ளார் .நான்கு வேதங்கள் பற்றி தெரியும், அதோடு ஐந்தாவது வேதம் பற்றியும் அது எதை சொல்லுகிறது? என்பதைப்பற்றியும் இந்த தொடரின் மூலம் இயக்குனர் நாகா.சொல்லியிருப்பதோடு, ஆர்டிஃபிஷியல்  இண்டலிஜென்ஸ் பற்றியும்  அவர் இந்த சீரிஸில் எடுத்து சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது .

.திரில்லர் கதை ரசிகர்களுக்கு இந்த ‘ஐந்தாம் வேதம்’ சிறப்பான ஒரு திரை விருந்தாக அமையும்..

Spread the love