கதையின் நாயகனான விஷ்வத்துக்கு தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று இலட்சிய ஆசை இருந்தாலும், அவரது ஏழ்மையான வாழ்வியல் சூழல், அவரது ஆசையை நிராசையாக்கி விடுகிறது ,எனவே ஒரு, ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை நகர்த்துகின்றான், பெண் போக்குவரத்து காவலரான சுனைனா விஷ்வத் மீது தன்னுடைய சொந்தத் தம்பியைப் போல் பரிவாக உள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள்,விஷ்வத்தின் ஆட்டோவில் 16 வயது ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பயணிக்கிறார். அவர் டைம் டிராவல் மூலம் 1948-ல் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருப்பதை விஷ்வத் அறிந்து கொள்கிறார்..16 வயது கலாம் எதற்காக தற்போதைய காலகட்டத்துக்கு திரும்பி வரவேண்டும் ?அதற்கான நோக்கமும் ,அவசியமும் என்ன? கலாமை மீண்டும் கடந்த காலத்துக்குள் விஷ்வத் திரும்ப அனுப்பி வைத்தாரா, இல்லையா ? என்பதே இந்த ‘ராக்கெட் டிரைவர்’.படத்தின் மீதி கதை.
கனவுகளை சுமந்து கொண்டு, அதே சமயத்தில் தன்னுடைய வாழ் சூழலுக்காக ,ஆட்டோஓட்டுனராக உள்ள பிரபா என்னும் கதாபாத்திரத்தில் ,விஸ்வத் சராசரி இஞைனாக, இயல்பாக நடித்துள்ளார். பெண் போக்குவரத்து காவலர் கதாபாத்திரத்தில், விஸ்வத் மீது பரிவு காட்டுபவராக நடித்திருக்கும் சுனைனாவும்,
இளம் வயது கலாமாக நடித்திருக்கும் நாகவிஷாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமாக நடித்துள்ளார்கள் .மேலும் கலாமின் நண்பராக நடித்துள்ள காத்தாடி ராமமூர்த்தி தன்னுடைய அனுபவ நடிப்பினை அழகாக பதிவு செய்துள்ளார். .
.இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ‘அவரும் செத்துட்டாரா?’ பாடல் மற்றும் பின்னணி இசையில் நன்றாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் இருவரின் பணியும் இயக்குனருக்கு பெரிய பின்புல உறுதுணையை வழங்கியுள்ளது.
வித்தியாசமான கற்பனைக் கதையை, நேர்த்தியான காட்சிகளுடன் நகர்த்தி , நல்லதொரு படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர்.
ஆக மொத்தத்தில், ‘ராக்கெட் டிரைவர்’ கருத்துடன் கூடிய கற்பனை பயணம்..
