Friday, April 24

ஆலன்- சினிமா விமர்சனம்

கதையின் நாயகனான தியாகு (வெற்றி), ஒரு விபத்தில் தனது பெற்றோரை இழந்து. வேதனை நிறைந்த மனதோடு வாழும் நிலையில் காசிக்கு சென்று விடுகிறார். அங்கு ஆன்மீக வாழ்வில் தனது குருவின் (ஹரிஷ் பெரடி) ஆதரவுடன் உள்ளார் குருவின் ஆலேசனைபடி ஆன்மீகவாதியாக இல்லாமல் சாதாரண மனித வாழ்க்கையில் எழுத்தாளர் ஆகும் லட்சியத்தோடு. சென்னைக்கு வருகிறார். .தமிழ் கலாச்சாரங்களை ஆராய வரும் ஜெர்மன் நாட்டு பெண்ணான ஜனனி தாமஸுடன் (மதுரா) தியாகுவிற்கு ஏற்படும் நட்பு பின் காதலாக மாறுகிறது. துறவியாக வாழ்திருந்தவர் சாதாரண மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் பயணிக்க முற்படும் போது, மீண்டும் ஒரு சம்பவத்தை எதிர்கொள்ள நேரிடுவதால்,அதன் பின் மீண்டும் அவரது வாழ்க்கை பயணத்தில் மாற்றம் நிகழ்கிறது ,இறுதியில் தியாகு அவர் ஆசைப்பட்டபடி எழுத்துதுறையில் வெற்றி பெற்றாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தன்னுடைய திரைப்பயணத்தில் நல்ல வலுவான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வெற்றி இந்த படத்திலும் , ஆழமான கதாபாத்திரத்தில், அதற்க்கு தகுந்த தோற்றத்துடன் யதார்த்தமான நடிப்பை படம் முழுவதும் கொடுத்து நடித்துள்ளார். நாயகிகளாக ஜனனி தாமஸ் என்னும் கதாபாத்திரத்தில் மதுராவும் , தாமரை என்னும் கதாபாத்திரத்தில் அனு சிதாராவும் குறை சொல்லாத முடியாத வகையில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள், மேலும் விவேக் பிரசன்னா, அருவி மதன், டிடோ வில்சன் போன்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலினின் கேமரா, காட்சிகளின் பின்புலத்துக்கு இணக்கமான வகையில் பயணித்து இருந்தது.படத்தின் பாடல்களையும் பின்னணி இசையினையும் மனோஜ் கிருஷ்ணா நன்கு வழங்கியுள்ளார்,படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதனின் பங்களிப்பு இயக்குநருக்கு உறுதுணையாக அமையப்பெற்றுள்ளது .

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர், பல கோணங்களில் பயணிக்கும் மைய கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அழகாக இணைத்து, ஒரு தனி மனிதனின் வாழ்வியலை நேர்த்தியான படமாக உருவாக்கியுள்ளார்

ஆலன்- ஒரு தனி மனிதனின் வாழ்வியல் தேடலின் பதிவு .

Spread the love