ஆரகன் விமர்சனம்

போரில் நாட்டினை இழக்கும் இளவரசன் ஒருவன் கானகத்திற்கு செல்கிறான், அப்போது அங்குள்ள முனிவரை பாம்பு தீண்ட அவரை இளவரசன் காப்பாற்றுகிறான். தனது உயிரை காப்பாற்றிய இளவரசனுக்கு என்ன வரம் வேண்டும் என்று அந்த முனிவர் கேட்கிறார் , அதற்கு அந்த இளவரசன், தான் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறான் . அதனால் அந்த முனிவர் இளவரசனுக்கு சக்தி வாய்ந்த வேர் ஒன்றை கொடுப்பதோடு ,அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களுக்கு பிறகு காட்சிகள் இப்போதைய நிகழ் காலத்துக்குள் தொடர்கின்றன ,அதன்படி சென்னையில் உள்ள கவிப்பிரியா, விடுதியில் தங்கியவாறு வேலை செய்து வருகிறார்.நாயகன் மைக்கேல் தங்கதுரையும் கவிப்ரியாவும் காதல் வயப்படுகிறார்கள் .இந்த சமயத்தில் மலைப்பகுதியில் உள்ள வயதான பெண் ஒருவரை கவனித்துக்கொள்ளும் வேலை கவிப்ரியாவிக்கு கிடைக்கிறது. நாயகன் மைக்கேல் தடுத்தும்,அந்த வேலைக்கு சென்று சேரும் கவிப்பிரியாவுக்கு, முதலில் எல்லாமே நன்றாகவே உள்ளது, ஆனால் சில மாதங்களுக்கு பிறகுதான் , அங்கு சில அமானுஷ்ய சக்தி இருப்பதை போல் கவிப்ரியாவுக்கு தெரிய வருகிறது .அதன் பின் கவிபிரியா அந்த சூழலில் இருந்து எப்படி மீண்டார் ? மைக்கேலின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாய் மாறுபட்ட இரண்டு பரிமாணங்களில் மைக்கேல் தங்கதுரை சிறப்பான நடிப்பை வழ ங்கியுள்ளார். நாயகியாக கவிபிரியா தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார் மேலும் புதிய பரிமாணத்தில் ஸ்ரீ ரஞ்சனி, வித்தியாசமான தோற்ற கதாபாத்திரத்தில் கலைராணி,போன்றோரும் தங்களது அனுபவ நடிப்பை குறைவின்றி.வெளிப்படுத்தியுள்ளார்கள் .
சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகும் கதைகளுக்கு ஏற்றதொரு முழு வடிவத்தினை சிறப்பாக அமைத்து தருவதில் பெரும் பங்கு ஒரு படத்தின் இசைக்கும் ஒளிப்பதிவுக்கும் உண்டு ,அந்த வகையில் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ள விவேக்- ஜெஸ்வந்த்தும், ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தியும் தங்களது .பங்களிப்பை நன்கு கொடுத்து இயக்குனருக்கு பக்க .பலமாய் நின்றுள்ளார்கள் .
சஸ்பென்ஸ், த்ரில்லர் கதை களத்துக்கு ஏற்ற விறுவிறுப்பாக திரைக்கதை காட்சிகளை அமைத்து நிறைவான படமாக உருவாக்கியுள்ளார் அருண் கே.ஆர்.
லாஜிக் இல்லாமல் பார்த்து ரசிக்கக்கூடிய பொழுது போக்கு படம் இந்த ஆரகன்.
