ஜூனியர் என்.டி.ஆரின் .டபுள் சரவெடி-தேவரா

கடல்.பகுதிக்கு அண்மையில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன. அங்கு ,கடலில் வரும் சரக்கு கப்பல்களில் இருக்கும் சட்ட விரோத ஆயுதங்கள், பொருட்களை கொள்ளையடிக்கும் குழுவாக தேவரா, பைரா மற்றும் கூட்டாளிகள் உள்ளார்கள்..ஒரு சூழலில் இனிமேல் கடலுக்கு செல்லக்கூடாது என முடிவு செய்கிறார் தேவரா. ஆனால் இதற்க்கு உடன்படாத பைரா உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் தேவராவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதனால் கடலுக்குள் சென்று மறைகிறார் தேவாரா.அதன்பின் அங்கு கடலுக்கு யார் சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தாலும் அவர்கள் கரைக்கு திரும்பாமல் மரணத்தையே தழுவ நேரிட்டது. இதை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என முடிவு செய்யும் பைரா,தேவராவின் மகன் வரவை கடலுக்குள் அனுப்புகின்றான் அதன் பின் என்ன நடந்தது? தேவரா என்னவானார்? என்பதே தேவரா முதல் பாகம் படத்தின் மீதி கதை.ஆகும்.
ஜூனியர் என்டிஆர் , தேவரா – வரா என்னும் கதாபாத்திரங்களில் ,அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தன்னுடைய ழுழு பங்களிப்பை கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார் . நாயகியாக தோற்றத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் ஜான்வி கபூர். சைஃப் அலிகானின் கதாபாத்திரமும் அதை அவர் சிறப்பாக வெளிப்படித்திய விதமும் நன்று .சயீஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூருக்கு தென்னிந்திய சினிமாவில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்துள்ளது இப்படம்.

மேலும் கலையரசன்,பிரகாஷ்ராஜ்,ஸ்ரீகாந்த் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் பின்னணி இசையும் தேவரா படத்தின் பெரிய தூண்களாக படத்தின் பலத்துக்கு வலு சேர்த்துள்ளது கொரட்டால சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான திரை விருந்தாக படம் உருவாக்கப்ட்டுள்ளது. .
அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் தேவாராவுக்கு இடம் கிடைக்கும் .
