பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரிலீசுக்கு முன்பு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் அந்த பிரபல நடிகரின் திரைப்பயணத்தில் அவர் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்று என்று அந்த படம் ஆகும்போது ,அந்த எதிர்பார்ப்பு இன்னமும் பலமடங்கு அதிகரித்து இருக்கும், அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள தி கோட்.எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது..
ஆண்டி டெரரிஸம் ஸ்பெஷலிஸ்ட்குழுவான SATSல் ரகசியமாக.விஜய்,பிரபுதேவா,பிரசாந்த் , ஜெயராம்,அஜ்மல் பணி புரிந்து வருகிறார்கள். மிஷன் ஒன்றின்போது தன் இளம் மகன் ஜீவனை இழந்துவிட்டதாக நினைத்திருக்கும் விஜய் பல வருடங்கள் கழித்து மீண்டும் மகனை (இதுவும் விஜய்தான்) எதிர்பாராத தருணத்தில் சந்திக்கிறார்.அதன்பின் நடப்பவை என்ன? என்பதுதான் தே ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் மீதிக்கதை..
இரண்டு தோற்றங்களில் விஜய்.ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது .ஆக்ஷன், சென்டிமென்ட் , சின்ன உடல் மேனரிசங்கள் என அனைத்து ஏரியாவிலும் இறங்கி அடித்து ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தூக்கி அமர்க்களப்படுத்தியுள்ளார் விஜய் .
விறுவிறுப்பான கதைகளத்தில் நகரும் இந்த திரைப்படத்தில் பல திரை நட்சத்திரங்கள் அணிவகுத்து நின்று நடித்துள்ளார்கள்.. பிரஷாந்த், ஜெயராம், பிரபுதேவா,மோகன், லைலா, அஜ்மல், பிரேம்ஜி, சினேகா , மீனாக்ஷி சௌத்ரி, யோகி பாபு, போன்றவர்களின் திரைபகிர்வு படத்தின் காட்சிகளுக்கு மேலும் தனி சிறப்பினை கூட்டியுள்ளது. ஏ ஐ மூலம் கேப்டன் விஜயகாந்த் இடம்பெறும் வரும் காட்சி அவருக்கு சிறப்பு மரியாதை தரும் வகையில் அமைந்துள்ளது.

சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு கதையின் நகர்வுக்கு ஏற்ப சிறப்பாக காட்சிகளை பதிவு செய்துள்ளது .. பின்னணி இசையில் யுவனின் பங்களிப்பு படத்தின் கதையோட்டத்துடன் நிறைவாக பயணிக்கிறது.
.முழு நீள அதிரடி ஆக்ஷன் கதைகேற்ற, விறுவிறுப்பான காட்சிகளை , தரமான தொழில்நுட்ப உதவியுடன் . ஒன்றாக்கி பக்கா பொழுதுபோக்கு படமாக்கி திரை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் வெங்கட்பிரபு.
ஆரம்பத்தில் சொன்னபடி, ரசிகர்களின் எக்கச்சக்க எதிர் பார்ப்புகளை இந்த படம் நிறைவேற்றி விட்டது என்று சொல்லலாம்.,தனிப்பட்ட விஜய் ரசிகர்களையும் தாண்டி அனைத்து திரை ரசிகர்களின் மனதையும் இந்த படம் நிச்சயம் கவரும் .
