Monday, May 4

சாலா -திரை விமர்சனம்

S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் கதைக்களத்தை கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் சாலா ..

“வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரை (மதுபானக் கூடம்) கைப்பற்ற இரண்டு சக்தி வாய்ந்த குழுவினர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று புனிதா என்னும் பெண் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கிறார். இறுதியில் பாரை யார் கைப்பற்றியது? மதுக்கடை இருக்கக்கூடாது என்று போராடிய பெண்ணின் போராட்டம் என்னவாயிற்று? என்பதை விறுவிறுப்பாக திரையில் சொல்லுகிறது சாலா படத்தின் கதை .

‘சாலா’ படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன்,சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கதையின் நாயகனாக தீரன் சாலா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தனி முத்திரை பதித்துள்ளார். புனிதவாக நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார்.மேலும் தங்கதுரையாக சார்லஸ் வினோத்தும் , குணாவாக அருள் தாஸ், மேலும் சம்பத் ராம் போன்றவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு இணக்கமான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் கதையில், சமூகத்துக்கு தேவையான கருத்தும் கலந்த படமாக .இயக்குநர் மணிபால் ‘சாலா’வை உருவாக்கியுள்ளார்.ஆக்ஷன் கமர்சியல் படங்களுக்கு தேவையான அளவீட்டில் ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும், தீசனின் இசையும், புவனின் படத்தொகுப்பும் அமைந்துள்ளது .

ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு சாலாவை மிகவும் பிடிக்கும் .

Spread the love