இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் நடந்துள்ளது.

இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘மின்மினி’ திரைப்படம் மூன்று பதின்ம வயதினரை சுற்றி நடக்கும் ஃபீல் குட் திரைப்படமாகும். இப்படம் இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Khatija Rahman –PHOTOGRAPHER CREDITS : KAPIL GANESH