Saturday, May 2

லாந்தர்- விமர்சனம்

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.லாந்தர் படத்தில் கதையின் நாயகனாய் ஏசிபி அரவிந்த் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் நடித்துள்ளார்.மர்ம நபர் ஒருவர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்குகிறார்,அவரை பிடிக்கச் செல்லும் காவல்துறை அதிகாரிகளும் தாக்கப்படுகின்றனர். ஏசிபி அரவிந்த் தீவிரமாக அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் . இறுதியில் அந்த சீரியல் கில்லரை ஏசிபி அரவிந்தால் பிடிக்கமுடிந்ததா ? யார் அந்த நபர் ?என்னும் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது லாந்தர் படத்தின் மீதி கதை.சிறப்பான கதாபாத்திரங்களில் தன்னுடைய தனித்தன்மையும் கலந்து நடித்துவரும் விதார்த் இந்த படத்தில் ஏசிபி அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை யதார்த்தமான முறையில் வெளிப்படித்தியு ள்ளார், அவரது மனைவி ஜானகியாக ஸ்வேதாடோரத்தியும் நன்கு நடித்துள்ளார்.மற்றும் இளம் தம்பதியராக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானாவின் நடிப்பும் நிறைவாக உள்ளது.

ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் படத்தை நல்ல திரைக்கதையுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் சஜிசலீம். கிரைம் திரில்லர் கதைகளுக்கு இயக்குனரின் பக்கபலமாய் துணை இருப்பவர்கள் இசையமைப்பாளர்,.ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என்று சொல்லலாம் ,அந்த வகையில் இந்த படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற சிறப்பான ஒளிப்பதிவை தந்துள்ளார் ஞானசௌந்தர், அதேபோல் பிரவீனின் இசையும் ரசிக்கும்படி உள்ளது, விறுவிறுப்பான திரைக்கதைக்கு படத்தொகுப்பாளர் எடிட்டர் பரத் விக்ரமனின் பங்களிப்பு பெரிதும் உள்ளது.

Spread the love